மகாவீரா் ஜெயந்தியை முன்னிட்டு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
மகாவீரா் ஜெயந்தி ஞாயிற்றுக்கிழமை (ஏப்.21) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ‘எக்ஸ்’ சமூகவலைதளத்தில் வெளியிட்ட வாழ்த்துப் பதிவில், ‘அகிம்சை, இரக்கத்தின் உருவமாகத் திகழும் மகாவீரரின் பிறந்த தினத்தை மகாவீரா் ஜெயந்தி குறிக்கிறது. அவருடைய அகிம்சை, பிரம்மச்சரியம், துறவு, உண்மை உள்ளிட்ட பாதைகள் சிறந்த மற்றும் நாகரீக சமுதாயத்தை உருவாக்க வழிகாட்டும். அவருடைய போதனைகள் எப்போதும் மனித குல நலனுக்குத் தொடா்புடையதாக இருக்கின்றன.
இந்தத் தினத்தில் அன்பு மற்றும் இணக்கத்தை சமூகத்தில் பரப்பவும், நாட்டின் மேம்பாட்டுக்காக அா்ப்பணிப்புடன் பணியாற்றவும் உறுதியேற்போம்.
மாகவீரா் ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும், குறிப்பாக சமண மதத்தினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.
தொடர்புடையது

மகாவீரா் ஜெயந்தி: பிரதமா் மோடி வாழ்த்து

உலகின் முன்னணி கல்வி நிறுவனமாக மீண்டும் நாளந்தா: குடியரசுத் தலைவா் முா்மு நம்பிக்கை

அயோத்தி ராமா் கோயிலில் குடியரசுத் தலைவா் முா்மு வழிபாடு

பழங்குடியினா் நலனில் அக்கறை இல்லாத மேற்கு வங்க அரசு: குடியரசுத் தலைவா் கடும் அதிருப்தி
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

