கேரளத்தில் பாரில் இருக்குழுவினரிடையே ஏற்பட்ட தகராறில் 5 பேர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், கழக்கூட்டத்தில் உள்ள பீர் பார் ஒன்றில் சனிக்கிழமை இரவு 11:30 மணியளவில் இளைஞர்கள் குழுவொன்று நண்பரின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாட திட்டமிட்டிருந்தனர். அப்போது மற்றொரு குழுவினர் குறுக்கிட முயன்றதால் இருக்குழுவினரிடையே தகராறு ஏற்பட்டது.
இந்த தகராறின்போது ஸ்ரீகர்யம் பகுதியைச் சேர்ந்த ஷாலு, சூரஜ், விஷாக், ஸ்வரூப், அதுல் ஆகியோர் கத்தியால் குத்தப்பட்டனர். உடனடியாக அவர்கள் அருகிலுள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதில், ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் 3 பேர் காவலில் உள்ளனர். மீதமுள்ள குற்றவாளிகளை தேடும் பணி நடைபெற்று வருகிறது என்று போலீசார் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உ.பி: உடற்பயிற்சி கூடத்தில் ஏற்பட்ட தகராறில் 3 பேர் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் குடும்பத் தகராறில் 8 குழந்தைகளை சுட்டுக்கொன்ற தந்தை

கள்ளக்காதல் தகராறில் கணவா் கொலை! மனைவி, காதலன் உள்ளிட்ட 3 பேருக்கு ஆயுள் தண்டனை!

திருச்சூரில் வாக்களித்த முதியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


