நீதிமன்ற தீர்ப்புகளில் பாஜக ஆதிக்கம்: மம்தா குற்றச்சாட்டு

பாஜக தலைவர்கள் நீதிமன்ற தீர்ப்புகளில் ஆதிக்கம் செலுத்துவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.
மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

பாஜக தலைவர்கள் நீதிமன்ற தீர்ப்புகளில் ஆதிக்கம் செலுத்துவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில், ஆசிரியர் பணி நியமனத்தில் நடந்த முறைகேட்டில், தொடர்புடைய 24 ஆயிரம் ஆசிரியர் நியமனங்களை ரத்து செய்ய வேண்டும் என கொல்கத்தா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, மம்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேற்குவங்கத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த ஆசிரியர் பணி நியமனத்துக்கான தேர்வினை 23 ஆயிரம் ஆசிரியர்கள் எழுதி 24 ஆயிரம் பேருக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் கொல்கத்தா உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

மம்தா பானர்ஜி
சூரத் எம்.பி.யாக பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு!

முறைகேட்டில், தொடர்புடைய 24 ஆயிரம் ஆசிரியர் நியமனங்களை நீதிமன்றம் ரத்து செய்தது. பள்ளி சேவை ஆணையம் உடனடியாக புதிய தேர்வுக்கான அறிவிப்புகளை வெளியிடவும், சட்டவிரோதமான நியமிக்கப்பட்டவர்களிடமிருந்து அடுத்த ஆறு வார காலத்துக்குள் அவர்கள் பெற்ற ஊதியத்தை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கவும் கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி, நீதித்துறை மற்றும் நீதிமன்ற தீர்ப்புகளில் பாஜகவினர் ஆதிக்கம் செலுத்துவதாக விமர்சித்தார்.

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசில் தொழில் துறை அமைச்சராக இருந்த பாா்த்தா சாட்டா்ஜி, முன்பு கல்வி அமைச்சராக இருந்தபோது ஆசிரியா் பணி நியமனம் தொடா்பாக முறைகேட்டில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறையால் 2022 ஜுலை 23ம் தேதி கைது செய்யப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com