சூரத் எம்.பி.யாக பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு!

குஜராத் மாநிலம் சூரத் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் போட்டியின்றி எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.
முகேஷ் தலால் (இடது)
முகேஷ் தலால் (இடது)

குஜராத் மாநிலம் சூரத் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் போட்டியின்றி எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.

காங்கிரஸ் சார்பில் மனுத்தாக்கல் செய்திருந்த நீலேஷ் கும்பானியின் மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் மக்களவைத் தேர்தல் முடியும் முன்பே முதல் மக்களவை உறுப்பினரை பெற்ற கட்சியாக பாஜக மாறியுள்ளது.

குஜராத் மாநிலம் சூரத் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக 8 பேர் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. இதில் 7 பேர் சுயேச்சை வேட்பாளர்கள். பகுஜன் சமாஜ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளரும் தனது வேட்புமனுவை திரும்பப் பெற்றார்.

காங்கிரஸ் சார்பில் நீலேஷ் கும்பானி மனுத்தாக்கல் செய்திருந்தார். அவரின் மனுவை ஏற்க கடந்த ஞாயிற்றுக்கிழமை மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து காங்கிரஸ் சார்பில் சுரேஷ் பத்சலா என்பவர் மனுத்தாக்கல் செய்தார். ஆனால், அதனை ஏற்கவும் தேர்தல் அலுவலர் மறுப்பு தெரிவித்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் முரண்பாடுகள் இருந்ததாக அதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கான கடைசிநாள் முடிவடைந்த நிலையில், தற்போது சூரத் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் எம்.பி.யாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு குஜராத் மாநில பாஜக தலைவர் சி.ஆர். பாட்டீல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com