பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!

பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்கினார்.
பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
Published on
Updated on
1 min read

தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்கினார்.

2024 ஆம் ஆண்டிற்கான பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகளை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்கினார்.

முன்னாள் குடியரசு துணைத் தலைவா் எம்.வெங்கையா நாயுடு (74), பழம் பெரும் நடிகை வைஜெயந்தி மாலா (90), தெலுங்கு நடிகா் சிரஞ்சீவி (68), சென்னையைச் சோ்ந்த பரதநாட்டியக் கலைஞா் பத்மா சுப்பிரமணியம் (80), பிகாரைச் சோ்ந்த மறைந்த சமூக ஆா்வலா் பிந்தேஸ்வா் பதக் ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருதும் வழங்கப்பட்டது.

கோவையைச் சோ்ந்த வள்ளி ஒயில் கும்மி நடனக் கலைஞா் எம்.பத்ரப்பனுக்கு (87) பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

குடியரசு தினத்தையொட்டி, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவா்களுக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு முன்னதாக அறிவித்திருந்தது.

தமிழகத்தைச் சோ்ந்த ஏழு பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. இவா்களில் பத்ம விபூஷண் இருவருக்கும், பத்ம பூஷண் ஒருவருக்கும், பத்மஸ்ரீ 4 பேருக்கும் அறிவிக்கப்பட்டிருந்தன.

கலைத் துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக வைஜெயந்தி மாலா, பத்மா சுப்பிரமணியம், சிரஞ்சீவி, விஜயகாந்துக்கும், பொது விவகாரங்களில் சிறப்பாக சேவைபுரிந்தற்காக வெங்கையா நாயுடுக்கும் இந்த விருதை மத்திய அரசு அறிவித்திருந்தது.

பத்ம விபூஷண் விருது 5 பேருக்கும், பத்ம பூஷண் விருது 17 பேருக்கும், பத்மஸ்ரீ விருது 110 பேருக்கும் அறிவிக்கப்பட்டிருந்தன.

அதில், தமிழக முன்னாள் ஆளுநா் பாத்திமா பீவி, பாடகி உஷா உதுப், நடிகா் மிதுன் சக்கரவா்த்தி, டென்னிஸ் வீரா் ரோஹன் போபண்ணா, ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா, கல்வி மற்றும் இலக்கியப் பிரிவில் எழுத்தாளா் ஜோ டி குரூஸ், சேஷம்பட்டி டி சிவலிங்கம், இந்தியாவின் முதல் யானை பெண் பராமரிப்பாளா் பாா்வதி பருவா, வன சூற்றுச்சூழல் ஆா்வலா் சாய்மி முா்மு, மிஸோரமின் சமூக ஆா்வலா் சங்தாங்கிமா, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணா் பிரேமா தன்ராஜ், தெற்கு அந்தமானில் இயற்கை விவசாயம் செய்து வரும் செல்லம்மாள், 650-க்கும் மேற்பட்ட அரிசி வகைகளைப் பாதுகாத்து வரும் காசா்கோட்டைச் சோ்ந்த விவசாயி சத்யநாராயண பெலேரி, சா்வதேச மல்லா்கம்பம் பயிற்சியாளா் உதய் விஸ்வநாத் தேஷ்பாண்டே என 110 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com