சோரன், கேஜரிவாலுக்கு காலியாக விடப்பட்ட நாற்காலிகள்: மக்கள் மனங்களை உலுக்குமா?

சோரன், கெஜரிவாலுக்கு காலியாக விடப்பட்ட நாற்காலிகள்: மக்கள் மனங்களை உலுக்குமா?
சோரன், கேஜரிவாலுக்கு காலியாக விடப்பட்ட நாற்காலிகள்: மக்கள் மனங்களை உலுக்குமா?

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டத்தில் சிறையில் உள்ள ஹேமந்த் சோரன் மற்றும் அரவிந்த் கேஜரிவாலின் பெயர் தாங்கிய நாற்காலிகள் காலியாக விடப்பட்டிருந்தது நேற்று ஊடகங்களில் வெளியாகியிருந்தது.

-

அதேவேளையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரன், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மனைவி சுனிதாவும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பாஜகவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.

நீரிழிவு பாதித்த அரவிந்த் கெஜரிவாலை திகார் சிறையில் அடைத்து இன்சுலின் கொடுக்காமல் கொலை செய்வதே நரேந்திர மோடி அரசின் சூழ்ச்சி என்று பேசியுள்ளார்.

சோரன், கேஜரிவாலுக்கு காலியாக விடப்பட்ட நாற்காலிகள்: மக்கள் மனங்களை உலுக்குமா?
பழங்குடியினரை அச்சுறுத்தும் பாஜக: காா்கே குற்றச்சாட்டு

தற்போது, கெஜரிவால் சாப்பிடும் உணவிலும் கேமரா வைத்துவிட்டார்கள். ஒவ்வொரு வாய் உணவும் கண்காணிக்கப்படுகிறது. இது அவமானமான செயல். அவர் நீரிழிவு நோயாளி. கடந்த 12 ஆண்டுகளாக தினமும் 50 யூனிட் இன்சுலின் எடுத்து வருகிறார். ஆனால் சிறையில் இன்சுலின் மறுக்கப்பட்டுளள்து. அவரைக் கொலை செய்ய வேண்டும் என்பதே அவர்களின் எண்ணம் என்று சுனிதா காட்டமாகப் பேசினார்.

ஹேமந்த் சோரன் மனைவி கல்பனாவும், பொதுக்கூட்டத்தில், பாஜகவுக்கு எதிராகவும், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராகவும் கடுமையான விமரிசனங்களை முன்வைத்திருந்தனர்.

மக்களவைத் தேர்தல் பிரசாரம் நாடு முழுவதும் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள இரண்டு முக்கிய கட்சிகளின் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே பல தேர்தல்களில் சிறையில் இருந்தே வேட்பாளர்கள் அனுதாப வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற வரலாறுகள் எல்லாம் இருக்கின்றன. முக்கிய கட்சிகளின் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது எந்தக் கட்சிக்கு சாதகமாக முடியும் என்பதை மக்கள் மனங்கள்தான் தீர்மானிக்கின்றன.

தலைவர்களின் நேரடி பிரசாரம் முடக்கப்பட்டுள்ளது ஒருபக்கம் பின்னடைவாக இருந்தாலும், அவர்கள் சிறையிலிருந்து வெளியிடும் செய்திகள் மற்றும் அவர்கள் சார்பில் சுனிதாவும், கல்பனாவும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பது போன்றவை, மக்கள் மனங்களை உலுக்குமா? அல்லது ஏற்கனவே இந்தக் கட்சிகளின் தொண்டர்களாக இருப்பவர்களை மட்டுமே இது சென்றடையுமா என்பது விரைவில் நடைபெறும் அடுத்தடுத்த கட்ட மக்களவைத் தேர்தல்களில் தெரிய வரலாம் என்று கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com