காங். தேர்தல் அறிக்கையில் இந்து, முஸ்லிம் வார்த்தைகளா? மோடிக்கு கார்கே சவால்

காங். தேர்தல் அறிக்கையில் இந்து, முஸ்லிம் வார்த்தைகளைக் காட்டுங்கள் என்று மோடிக்கு கார்கே சவால் விடுத்துள்ளார்.
ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே (கோப்புப்படம்)
ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே (கோப்புப்படம்)

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மக்களின் சொத்துகளை முஸ்லிம்களுக்கு மறுபகிர்வு செய்வதாக உறுதியளித்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பேசிய பேச்சுக்கு, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இந்து, முஸ்லிம் என்ற வார்த்தைகளைக் காட்டுங்கள் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சவால் விடுத்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த பாஜக கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், தாங்கள் மத்தியில் ஆட்சிக்கு வந்தால், நாட்டில் உள்ள தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் தங்க நகைகளையும், குடும்பத்தினரின் சொத்து மதிப்புகளையும் பங்கிட்டு அதனை முஸ்லிம்களுக்கு மறுபகிர்வு செய்வார்கள் என்று பேசியிருந்தார்.

நாட்டின் வளங்களில் சிறுபான்மையினருக்குத்தான் முதல் உரிமை என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தனது ஆட்சிக்காலத்தின்போது கூறியிருந்தார் என்பதையும் பிரதமர் மோடி மேற்கோள்காட்டிப் பேசினார்.

ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே (கோப்புப்படம்)
கவனத்தை திசைதிருப்ப புதிய உக்திகளை கையாளும் மோடி: ராகுல் குற்றச்சாட்டு

முதல் கட்ட வாக்குப்பதிவில் இந்தியா கூட்டணியே வெற்றிபெறும் என்று தெரிந்துவிட்டதால், பிரதமர் நரேந்திர மோடி மோசமாகப் பேசி வருகிறார் என்று மல்லிகார்ஜுன கார்கே எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்க, எதிர்க்கட்சிகள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை பிரதமர் மோடி கூறி வருகிறார். இந்திய வரலாற்றிலேயே, பிரதமர் நரேந்திர மோடியைப் போல எந்தவொரு பிரதமரும் இவ்வாறு தரம்தாழ்ந்த மரியாதைக் குறைவான பேச்சுகளை பேசியதேயில்லை.

ஒரே ஒரு தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக, இந்து - முஸ்லிம் பெயரால் பொய்களைப் பரப்புகிறுர்கள். நான் பிரதமர் மோடிக்கு ஒரு சவாலை விடுக்கிறேன், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், ஏதேனும் இந்து, முஸ்லிம் என்ற வார்த்தைகள் இடம்பெற்றிருக்கிறதா என்று காட்டுங்கள். இல்லாவிட்டால் சவாலை ஏற்றுக்கொள்ளுங்கள் அல்லது பொய் கூறவதை நிறுத்துங்கள் என்று கார்வே பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com