உருப்பெருக்கி வைத்துப் பார்க்கும் அளவில் பதஞ்சலி மன்னிப்பு விளம்பரம்: உச்ச நீதிமன்றம் கண்டனம்

பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்கும் அளவில் பதஞ்சலி மன்னிப்பு விளம்பரம் உள்ளதற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
கடன் தவணைக்கு தளர்வு, ஆனால் வட்டிக்கு வட்டியா? உச்ச நீதிமன்றம் கண்டனம்
கடன் தவணைக்கு தளர்வு, ஆனால் வட்டிக்கு வட்டியா? உச்ச நீதிமன்றம் கண்டனம்

புது தில்லி: மன்னிப்புக் கோரிய விளம்பரத்தை உருப்பெருக்கி வைத்துப் பார்க்கும் அளவில் இருப்பதற்கு பதஞ்சலி நிறுவனத்துக்கு கண்டனம் தெரிவித்திருக்கும் உச்ச நீதிமனற்ம், தவறான விளம்பரங்கள் கொடுத்த அளவில் மன்னிப்பு வெளியிடுமாறு உத்தரவிட்டுள்ளது.

புதிய விளம்பரத்தை நாளிதழ்களில் கொடுத்து அதனை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஏப்ரல் 30ஆம் தேதிக்கு உச்ச நீதின்றம் உத்தரவிட்டுள்ளது.

கடன் தவணைக்கு தளர்வு, ஆனால் வட்டிக்கு வட்டியா? உச்ச நீதிமன்றம் கண்டனம்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெண் கொலை?

தவறான விளம்பரம் கொடுத்தது குறித்து நாட்டில் உள்ள முன்னணி 67 நாளிதழ்களில் மன்னிப்பு வெளியிடப்பட்டதாக பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடக்காது என்றும் உறுதிமொழி அளிக்கப்பட்டது.

இந்த மன்னிப்பு விளம்பரங்களைக் கொடுக்க நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் செலவானதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் தரப்பில் தவறான விளம்பரங்களை வெளியிட்ட வழக்கு விசாரணையின்போது, நிறுவனம் சார்பில் அளிக்கப்பட்ட பதிலைக் கேட்ட உச்ச நீதிமன்றம், நாளிதழ்களில், பதஞ்சலி வெளியிட்ட தவறான விளம்பரம் அளவுக்கே, மன்னிப்பும் இருக்கிறதா என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

விளம்பரத்தின் நகல்களைப் பார்த்த உச்ச நீதிமன்றம், உருப்பெருக்கி வைத்துப் பார்க்கும் அளவுக்கு மன்னிப்புக் கோரும் விளம்பரம் சிறியதாக இருக்கிறதே என்று ராம் தேவுக்கு கடும் கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், உங்கள் தயாரிப்புகளின் விளம்பரங்களை இந்த அளவில்தான் கொடுத்தீர்களா என்று கேள்வி எழுப்பியிருக்கிறது. புதிய விளம்பரங்களை வெளியிட்டு, நீதிமன்றத்தில் சமர்பிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

தடை உத்தரவை மீறி தவறான விளம்பரங்களை வெளியிட்ட வழக்கில் யோகா குரு பாபா ராம்தேவ், பதஞ்சலி நிா்வாக இயக்குநா் பாலகிருஷ்ணா ஆகியோா் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய நிலையில் அதனை உச்ச நீதிமன்றம் பல முறை நிராகரித்து தவறான விளம்பரங்கள் கொடுத்ததற்காக மன்னிப்புக் கேட்பதாக நாளிதழ்களில் விளம்பரம் கொடுக்க உத்தரவிட்டிருந்தது.

மேற்கத்திய மருத்துவ முறையான அலோபதி, கரோனா தடுப்பூசித் திட்டம் ஆகியவை குறித்து தவறான கருத்துகளைத் தெரிவித்ததாக யோகா குருவான பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுா்வேத நிறுவனம் மீது உச்ச நீதிமன்றத்தில் இந்திய மருத்துவ சங்கம் வழக்கு தொடுத்திருந்தது.

இந்த வழக்கு மீதான விசாரணையின்போது, எந்தவொரு மருத்துவமுறைக்கும் எதிராக கருத்து தெரிவிக்கக்கூடாது எனவும் மருந்துகள் குறித்த தவறான விளம்பரங்களை வெளியிடக் கூடாது எனவும் பதஞ்சலி நிறுவனத்துக்கு கடந்த நவம்பா் மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் பதஞ்சலி நிறுவனம் தொடா்ந்து தவறான விளம்பரங்களை வெளியிட்டதாக கூறப்பட்ட நிலையில் அவா்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹிமா கோலி மற்றும் அமானுல்லா ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்து வருகிறது.

தொடர்ந்து வழக்கு விசாரணைகளின்போது, ராம் தேவ் மற்றும் பதஞ்சலி நிா்வாக இயக்குநா் பாலகிருஷ்ணா ஆகியோர் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியும், உச்ச நீதிமன்றம் அதனை ஏற்க மறுத்து, நீதிமன்றத்துக்கு நீங்கள் அளித்த உத்தரவாதத்தை பின்பற்றி நடந்திருக்க வேண்டும். ஆனால் அனைத்துத் தடைகளையும் மீறி செயல்பட்டுள்ளீா்கள். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு என்பது சட்டம் அனைவருக்கும் மேலானது என்பதை உணா்த்தவே கொண்டுவரப்பட்டது. தடைகளை மீறிவிட்டு நீங்கள் வெற்று நடைமுறைக்காக தற்போது மன்னிப்புக் கேட்பது ஏற்புடையதல்ல என்று காட்டமாகத் தெரிவித்துவிட்டது.

தனித் தீவில்..

கடந்த விசாரணையின்போது, பதஞ்சலி நிா்வாகத்தின் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் விபின் வாதாடுகையில், ‘நீதிமன்ற உத்தரவு தொடா்பான தகவல்கள் நிறுவனத்தின் ஊடகப் பிரிவினருக்கு தெரியவில்லை. அதனால்தான் இதுபோல் தவறு நிகழ்ந்துள்ளது’ என்றாா். இதற்கு ஆட்சேபம் தெரிவித்த நீதிபதிகள், ‘நீதிமன்ற உத்தரவை உங்கள் ஊடகப் பிரிவுக்கு தெரிவிக்காதது யாருடைய தவறு. உங்கள் நிறுவன அலுவலகத்தில் இல்லாமல் ஊடகப்பிரிவு தனித்தீவில் உள்ளதா? இதுபோன்ற விளக்கங்களை ஏற்க நாங்கள் தயாராக இல்லை.

மத்திய அரசு மெளனம் ஏன்?

கரோனா பெருந்தொற்றின்போது மாற்று மருந்துகளாக ஆயுா்வேத மருந்துகளை மத்திய அரசின் குழு பரிந்துரைத்தது. இதைத்தான் ஊா் முழுவதும் கூறி பதஞ்சலி நிறுவனம் தங்கள் மருந்துளை விளம்பரப்படுத்தியுள்ளது. இது தவறு என தெரிந்தும் அவா்கள் இதைச் செய்துள்ளனா். இதைக் கண்டும் காணாமல் மத்திய அரசு தன் கண்களை மூடிக்கொண்டிருப்பது ஆச்சரியமாக உள்ளது என்றும் கண்டனம் தெரிவித்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com