கிருஷ்ணா தண்ணீரை நிறுத்தியது ஆந்திரம்: மிச்ச தண்ணீர்?

கிருஷ்ணா தண்ணீரை நிறுத்தியது ஆந்திரம், மிச்ச தண்ணீர் ஜூனில் திறப்பதாக உறுதி
கிருஷ்ணா தண்ணீரை நிறுத்தியது ஆந்திரம்: மிச்ச தண்ணீர்?

கண்டலேறு நீர்த்தேக்கத்தில், தண்ணீர் இருப்புக் குறைந்திருப்பதாகக் கூறி, ஆந்திர மாநில அரசு, கிருஷ்ணா ஆற்றில் தமிழகத்துக்குத் திறந்துவிடப்படும் தண்ணீரை நிறுத்திவிட்டது.

மாறாக, வரும் ஜூன் மாதத்தில், தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் போதுமான மழை பெய்து நீர் இருப்பு வந்ததும், தமிழகத்துக்குக் கொடுக்க வேண்டிய நிலுவை தண்ணீர் 4 டிஎம்சியை திறந்துவிடுவதாக ஆந்திர அரசு உறுதி அளித்துள்ளது.

இரு மாநிலங்களுக்கும் இடையேயான ஒப்பந்தத்தின்படி, ஆந்திர மாநிலம் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்துக்கு 12 டிஎம்சி தண்ணீரை திறக்க வேண்டும். அதில், 8 டிஎம்சி தண்ணீர் ஜூலை முதல் அக்டோபர் காலத்திலும், இரண்டாவது நிலுவை ஜனவரி - ஏப்ரல் காலத்திலும் கொடுக்கப்படவேண்டும்.

கிருஷ்ணா தண்ணீரை நிறுத்தியது ஆந்திரம்: மிச்ச தண்ணீர்?
அண்ணாநகருக்கு விமோசனம்: வரவிருக்கிறது வாகன நிறுத்துமிடம்!

ஆனால், 2023 - 24ஆம் நீர் ஆண்டுக் காலத்தில் தமிழகம் இதுவரை வெறும் 2.412 டிஎம்சி தண்ணீரைத்தான் பெற்றுள்ளது. கண்டலேறு அணையின் நீர்த்தேக்கம் 7.4777 டிஎம்சியாக உள்ளது. இதன் மொத்த கொள்ளளவு 68.03 டிஎம்சியாகும். இந்த தண்ணீர் சென்னையின் குடிநீர்த் தேவைக்குப் பயன்படுத்தப்பட வேண்டியதாகும்.

இந்த ஆண்டு தொடக்கத்தில், சென்னையின் குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் ஏரிகளில் போதிய அளவில் தண்ணீர் இருந்தது. அதனால், வடகிழக்குப் பருவமழையின்போது தண்ணீர் திறக்க வேண்டாம் என தமிழக அரசு தரப்பில் ஆந்திரத்தைக்கேட்டுக்கொண்டது. ஆனால், தற்போது ஒட்டுமொத்தமாக சென்னையில் உள்ள நீர்த்தேக்கங்களில் வெறும் 6.980 டிஎம்சி தண்ணீர்தான் உள்ளது.

ஒரு சில வாரங்களுக்கு முன்பே, கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் நிறுத்தப்பட்டது. ஒருவேளை, தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டாலோ, தண்ணீர் அளிக்கப்படவில்லையென்றாலோ, அந்த ஆண்டுக்கான தண்ணீர் கணக்கு முடிந்துவிடும், ஜூன் அல்லது ஜூலையில் புதிய கணக்கு அதாவது 2024 - 25ஆம் ஆண்டுக்கான கணக்குதான் தொடங்கும் என்றும் அதிகாரிகள் விளக்கம் கொடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com