ரூ.1,60,00,00,00,00,000 கடன் தள்ளுபடி: ரமணா பட பாணியில் ராகுல் குற்றச்சாட்டு

மோடியின் நண்பர்களிடமிருந்து பணம் மீட்கப்பட்டு மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்: ராகுல்
ரூ.1,60,00,00,00,00,000 கடன் தள்ளுபடி: ரமணா பட பாணியில் ராகுல் குற்றச்சாட்டு

பிரதமர் மோடியின் நண்பர்களிடமிருந்து பணம் மீட்கப்பட்டு அது நாட்டில் மிச்சம் உள்ள 90 சதவீத மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர், எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார்.

மக்களின் செல்வத்தையெல்லாம் பறித்து, ஊடுருவல்காரர்களுக்கு, சிறுபான்மையினர் என்று கூறி காங்கிரஸ் பகிர்ந்துகொடுத்துவிடும் என்று பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தின்போது கூறியிருந்ததற்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் பதில் கொடுத்துள்ளார்.

நாட்டில் உள்ள தொழிலதிபர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ரூ.16 லட்சம் கோடி அளவுக்கு கடனை தள்ளுபடி செய்திருக்கிறார். பிரதமர் மோடி தள்ளுபடி செய்த பணத்தை தொழிலதிபர்களிடமிருந்து மீட்டு அதனை நாட்டில் உள்ள 90 சதவீத மக்களுக்கு பகிர்ந்தளிப்பேன்.

இதனை காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலும் உறுதி அளித்திருக்கிறோம். தனது நண்பர்களுக்காக 16 லட்சம் கோடி ரூபாயை தள்ளுபடி செய்து நாட்டுக்கு துரோகம் செய்துவிட்டார், இந்தக் குற்றத்துக்காக நாட்டு மக்கள் அவரை மன்னிக்க மாட்டார்கள்.

அந்த பணத்தைக் கொண்டு, நாட்டு மக்களின் துயரங்களைத் துடைத்திருக்கலாம், மாறாக, பல அதானிகளை உருவாக்கத்தான் இந்தப் பணம் பயன்பட்டுள்ளது. அவர் தனது நண்பர்களுக்காக தள்ளுபடி செய்த தொகை 1,60,00,00,00,00,000 ரூபாய். அதாவது, 16 லட்சம் கோடி என்று ராகுல் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஒருவருக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் செலவிட்டிருந்தால் கூட நாட்டில் 16 கோடி இளைஞர்களுக்க வேலை வாய்ப்பு கிடைத்திருக்கும். ஒரு குடும்பப் பெண்ணுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கொடுத்திருந்தால் 16 கோடி பெண்கள் தங்கள் குடும்பத்தின் தலைவிதியையே மாற்றியிருப்பார்கள்.

கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தால் 10 கோடி விவசாயிகளின் குடும்பங்களின் கண்ணீர் துடைக்கப்பட்டிருக்கும், எண்ணற்ற தற்கொலைகள் தடுக்கப்பட்டிருக்கும்.

இந்த ரூ.16 லட்சம் கோடி இருந்தால், 20 ஆண்டுகளுக்கு நாட்டு மக்களுக்கு ரூ.400க்கு கேஸ் சிலிண்டர் கொடுத்திருக்கலாம் என்று தொடர்ச்சியான விளக்கங்களை அடுக்கியிருக்கிறார் ராகுல் காந்தி.

ரூ.1,60,00,00,00,00,000 கடன் தள்ளுபடி: ரமணா பட பாணியில் ராகுல் குற்றச்சாட்டு
முஸ்லிம்களுக்கு எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடு: காங்கிரஸ் மீது பிரதமா் மோடி குற்றச்சாட்டு

மோடி பேசியது..

‘நாட்டு மக்களின் வளங்களைப் பறித்து, ‘குறிப்பிட்ட’ மக்களுக்கு விநியோகிக்க காங்கிரஸ் பெரும் சதித்திட்டத்தை தீட்டியுள்ளது’ என்று பிரதமா் மோடி நேற்று குற்றம்சாட்டியிருந்தார்.

ராஜஸ்தானின் டோங்க் பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாஜக பிரசார பொதுக் கூட்டத்தில் அவா் பங்கேற்றுப் பேசியதாவது: ஒரு தரப்பினரை திருப்திப்படுத்துதல், வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுவதே காங்கிரஸின் சித்தாந்தமாகும்.

நாட்டின் வளங்களில் முஸ்லிம்களுக்கே முதல் உரிமை உள்ளதாக முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் தனது உரையொன்றில் குறிப்பிட்டிருந்தாா். இது, தற்செயலான கருத்து அல்ல என்றும் மோடி கூறியிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com