ரூ.150 கோடி மோசடி: மிசோரம் மாநிலத்தில் 11 பேர் கைது!

மிசோரமில் ரூ.150 கோடி நிதி மோசடி: முக்கிய குற்றவாளிகள் கைது
ரூ.150 கோடி மோசடி: மிசோரம் மாநிலத்தில் 11 பேர் கைது!

அய்ஸ்வால்: மிசோரமில் உள்ள தனியார் வங்கி நிதி நிறுவனத்தில் ரூ.150 கோடி மோசடி செய்ததாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து மிசோரம் டிஜிபி அனில் சுக்லா தெரிவித்ததாவது:

குற்றச் சம்பவங்களை தடுக்க போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், இந்த மோசடி நான்கு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்றது என்றும், இதில் ஐந்து கார் டீலர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் அதன் மிசோரம் பகுதி வணிக மேலாளர் ஜாகிர் உசேன்(41) மீது அய்ஸ்வால் காவல் நிலையத்தில் மார்ச் 20ஆம் தேதியன்று புகார் அளித்ததை தொடர்ந்து இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. அதே வேளையில் நிறுவனம் அளித்த மற்றொரு புகாரின் அடிப்படையில் மார்ச் 29ஆம் தேதியன்று குற்றம் மற்றும் பொருளாதார குற்றவியல் காவல் நிலையத்தில் மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

விசாரணையின் போது, ஜாகிர் உசேன் மற்றும் சில கிளை ஊழியர்கள் 2020ல் மிசோரம் கிராமப்புற வங்கியின் கட்லா கிளையில் மஹிந்திரா ஃபைனான்ஸ் லிமிடெட் என்ற பெயரில் போலி வங்கிக் கணக்கைத் தொடங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் ரூ.150 கோடி நிதி மோசடி தொடர்பாக அதன் மூளையாக செயல்பட்ட ஜாகீர் உசேன் உள்பட 11 பேரை கைது செய்துள்ளோம்.

மொத்தம் ரூ.2.5 கோடி மதிப்புள்ள 26 வங்கிக் கணக்குகள் இதுவரையிலும் முடக்கப்பட்டு, ஐந்து நபர்களை ரிமாண்டிலும், மற்றவர்கள் நீதிமன்றக் காவலிலும் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com