12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

திகார் சிறையில் கேஜரிவாலை சந்திக்க சுனிதாவுக்கு அனுமதி!

கேஜரிவாலை சந்திப்பதற்கு திகார் சிறை நிர்வாகம் அனுமதி/

Published On :

தில்லி முதல்வர் கேஜரிவாலை சந்திக்க அவரது மனைவி சுனிதா கேஜரிவாலுக்கு திகார் சிறை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதாக ஆம் ஆத்மி திங்கள்கிழமை தெரிவித்தது.

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை அமலாக்கத்துறை கடந்த மாா்ச் 21-ஆம் தேதி கைது செய்தது. தொடர்ந்து ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அவா் திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், கேஜரிவாலை சந்திப்பதற்கு சுனிதா கேஜரிவாலுக்கு திகார் சிறை நிர்வாகம் இன்று அனுமதி வழங்கியுள்ளதாகவும், இந்த சந்திப்பின்போது தில்லி அமைச்சரவை அமைச்சர் அதிஷியும் உடல் இருப்பார் என்று கட்சி தகவல் தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை முதல்வரைச் சந்திக்க சிறை அதிகாரிகள் அனுமதி மறுத்ததாக ஆம் ஆத்மி கூறியது. இந்த குற்றச்சாட்டை சிறை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் செவ்வாய்க்கிழமை கேஜரிவாலை சந்திக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.