ஒரே குடும்பத்தில் 5 பேருக்காக வீட்டு வாசலில் வாக்குச்சாவடி!

ஒரே குடும்பத்தில் 5 பேருக்காக வீட்டு வாசலில் வாக்குச்சாவடி அமைக்கப்படவிருக்கிறது.
கோப்பிலிருந்து..
கோப்பிலிருந்து..

ஸ்ரீநகர்: யூனியன் பிரதேசமான லடாக் பகுதியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து வாக்காளர்களுக்காக மட்டும் ஒரு வாக்குச்சாவடியை அமைக்கவிருக்கிறது தேர்தல் ஆணையம்.

லேஹ் மாவட்டம் மிகவும் பின்தங்கிய கிராமமான வாஷி கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 வாக்காளர்களுக்காக, ஒரு தனி வாக்குச்சாவடியை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து லடாக் தலைமை தேர்தல் அதிகாரி யதிந்திரா எம். மரல்கள் கூறுகையில், வாஷியில், ஒரு டென்ட் கொட்டகையில், வாக்குச்சாவடி அமைக்கப்படவிருக்கிறது. இது லேஹ் மாவட்டத்தில் இருந்து சுமார் 170 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் கிராமமாகும். 100 சதவீத வாக்குகளை உறுதி செய்வதற்காக, நாடு முழுவதும் மக்கள் இருக்கும் இடங்களுக்கு அருகே வாக்குச்சாவடிகளை அமைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த வாக்குச்சாவடி அமையவிருக்கிறது என்றார்.

கோப்பிலிருந்து..
சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

லடாக் மக்களவைக்கு மே 20ம் தேதி ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவின்போது தேர்தல் நடைபெறவிருக்கிறது. காஷ்மீருக்கு தனி அந்தஸ்து அளிக்கும் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு, ஜம்மு -காஷ்மீரின் இரண்டு யூனியன் பிரதேசங்களான ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் மிகப்பெரிய தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்த கிராமத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். அவர்கள் வாழும் பகுதியிலேயே வாக்குச்சாவடி அமைக்கப்பட வேண்டும் என்பதற்காக, அவர்கள் வீட்டு வாசல் அருகே கொட்டகையில் வாக்குச்சாவடி அமையவிருக்கிறது என்கிறார் மரல்கர்.

அவர்களது குடும்பத்தில் ஒட்டுமொத்தமாக ஆறு பேர் உள்ளனர். அவர்களில் 2 ஆண்களும் 3 பெண்களும் வாக்குரிமை பெற்றுள்ளனர். குடும்பத் தலைவர் விவசாயியாவார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com