ககன்யான் திட்டம்: பாராசூட் சோதனையில் இஸ்ரோ!

அடுத்தகட்ட சோதனைகளில் மனிதர்களை வைத்து இஸ்ரோ சோதனையில் ஈடுபடவுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் பாராசூட் சோதனையில் இஸ்ரோ ஈடுபடவுள்ளது.

ஆரம்பகட்டமாக மாதிரிகளை பாராசூட்டில் அனுப்பி சோதனை செய்யப்படவுள்ளது.

இதற்கு அடுத்தகட்ட சோதனைகளில் மனிதர்களை வைத்து இஸ்ரோ சோதனையில் ஈடுபடவுள்ளதாக கூறப்படுகிறது.

ஒருங்கிணைந்த ஏர் டிராப் டெஸ்ட் முறையில் இந்த பாராசூட் சோதனை நடத்தப்படவுள்ளது. நிபந்தனைகளுக்குட்பட்ட வழிகளில் ஏர் டிராப் டெஸ்ட் முறையில் பாராசூட் சோதனை செய்யப்படுவது இதுவே முதல்முறை.

அதாவது, பாராசூட் திறக்கப்படாமலும், பாராசூட் திறந்தபடியும், பகுதியளவு சென்று திறப்பதை போன்று - என மூன்று வழிகளில் சோதனை செய்யப்படுகிறது. 4 - 5 கிலோமீட்டர் உயரத்திலிருந்து பாராசூட் பரிசோதனை செய்யப்படவுள்ளது.

இந்த பாராசூட் பரிசோதனைக்கு கடற்படை உதவியும் கோரப்பட்டுள்ளது.

கோப்புப் படம்
விண்கல்லால் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளம்!

நிலவின் தென் துருவத்தில் செயற்கைகோளை தரையிறக்கி சாதனை படைத்த இஸ்ரோ, மனிதா்களை விண்வெளிக்கு அனுப்பி ஆராய்ச்சி செய்யும் திட்டத்தை கடந்த 2007-இல் உருவாக்கியது.

ரூ.10 ஆயிரம் கோடி செலவில் கட்டமைக்கப்படவுள்ள இந்தத் திட்டத்துக்கு ககன்யான் என 2014-இல் பெயரிடப்பட்டது.

விண்கலம் மூலம் நான்கு விஞ்ஞானிகளை விண்வெளிக்கு அனுப்பி பூமியில் இருந்து 470 கி.மீ. தொலைவில் நிலைநிறுத்தி 2 வாரங்கள் தங்கியிருந்து ஆராய்ச்சி மேற்கொள்ளச் செய்வதே இத்திட்டத்தின் நோக்கம்.

இதற்கான விண்கலம் தயாரிக்கும் பணிகளும், விண்வெளிக்குச் செல்லும் விஞ்ஞானிகளுக்கு பயிற்சியும் நடைபெற்று வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com