அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? காங்கிரஸில் நிலவும் குழப்பம்
அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை
படம் | ஏஎன்ஐ

உத்தர பிரதேசத்தின் அமேதி, ரேபரேலி மக்களவை தொகுதிகளில் 5-ஆம் கட்ட தேர்தல் நாளான மே.20-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்த நிலையில், கேரளத்தின் வயநாடு தொகுதியில் போட்டியிட்டுள்ள ராகுல் காந்தி அமேதியிலும் களம் காண வேண்டும் என உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் விரும்புகிறது. ஒருவேளை ராகுல் காந்தி போட்டியிடாவிட்டால் பிரியங்கா காந்தி வேட்பாளராக போட்டியிட வேண்டும் என அக்கட்சி தலைமையிடம் உ.பி. காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.

உத்தர பிரதேசத்தின் அமேதி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்ற குழப்பம் நீடிக்கிறது. கடந்த 27-ஆம் தேதி நடைபெற்ற காங்கிரஸ் மத்திய தேர்தல் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் அமெதி வேட்பாளர் யார்? என்பது முடிவு செய்யப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னும் ஓரிரு நள்களுக்குள் அறிவிக்கப்படுமென்று தெரிவித்தார் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.

இந்த நிலையில், ரேபரேலியில் போட்டியிட பிரியங்கா காந்திக்கும், என்ற தகவல் காங்கிரஸ் வட்டாரத்திலிருந்து வெளிவரத் தொடங்கியுள்ளது.

ரேபரேலியில் கடந்த 2006 முதல் காங்கிரஸ் எம்.பி.யாக இருந்து வந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்ட நிலையில், அவருடைய மகள் பிரியங்கா காந்தி அத்தொகுதியில் போட்டியிட அதிகம் வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில், அகில இந்திய அளவில் காங்கிரஸ் மற்றும் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யப்போவதாக தற்போது முழுவீச்சில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் பிரியங்கா காந்தி விருப்பம் தெரிவித்துள்ளார்.

மறுபுறம், ராகுல் காந்தியை மீண்டும் அமேதி தொகுதியில் வேட்பாளராக நிறுத்தலாமா என்பதில் கட்சித் தலைமைக்கு இன்னும் குழப்பம் நீடித்து வருகிறது. அமேதியில் போட்டியிடுவது குறித்து ராகுல் காந்தி இன்னும் முடிவு எடுக்கவில்லை என்றே சொல்லப்படும் சூழலில், உத்தர பிரதேசத்தை சேர்ந்த உள்ளூர் வேட்பாளரை களமிறக்கவும் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமேதி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய மே 3-ஆம் தேதி கடைசி நளாகும். வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் 4 நாள்களே எஞ்சியுள்ள நிலையில், அமேதி வேட்பாளர் யார்? என்ற குழப்பத்திற்கு அடுத்த 24 மணி நேரத்தில் தீர்வு கிடைத்துவிடும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் கார்கே.

கடந்த மக்களவை தேர்தலில் அமேதியில் ராகுல் காந்தியை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக தலைவர் ஸ்மிருதி இராணி வெற்றி பெற்றார். இந்த நிலையில், அமேதி மக்களவைத் தொகுதியில் மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி நேற்று(ஏப். 29) தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com