வயநாடு நிலச்சரிவு: இயற்கை பேரிடராக அறிவிக்க சசி தரூர் கோரிக்கை!

மறுவாழ்வுப் பணிகளுக்கு விருப்பமுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாராளமாக நிதி வழங்க முன்வர வேண்டும்.
சசி தரூர் (கோப்புப்படம்)
சசி தரூர் (கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

வயநாடு நிலச்சரிவுகளை கடுமையான இயற்கைப் பேரிடராக அறிவிக்குமாறு திருவனந்தபுரம் எம்.பி. சதி தரூர், உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் கோரிகை விடுத்துள்ளார். .

இதுதொடர்பாக ஷாவுக்கு அவர் எழுதிய கடிதத்தில்,

கேரளத்தின் வயநாட்டில் தொடர்ச்சியான பேரழிவுகரமான நிலச்சரிவுகள் ஏற்பட்டதாகவும், இதில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகியும், மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுன்னர். ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கி காணாமல் போயுள்ளனர்.

சசி தரூர் (கோப்புப்படம்)
வயநாடு நிலச்சரிவில் சிக்கி மேலும் ஒரு தமிழா் உயிரிழப்பு

நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இந்த பேரழிவானது பல மரணங்களையும், சோதகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாக ஆயுதப் படை, கடலோரக் காவல் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை உள்ளிட்ட பிற முகமைகள் கூட்டாக ஒன்றிணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது.

நிலச்சரிவால் எண்ணற்ற பாதிப்பும், பலியும் ஏற்பட்டுள்ளன. எனவே வயநாட்டு மக்களுக்கு அனைத்துவிதமான ஆதரவையும் வழங்குவது மிகவும் முக்கியமானது. அதேசமயம், இந்தப் பேரழிவை 'கடுமையான இயற்கையின் பேரழிவு' என்று அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

சசி தரூர் (கோப்புப்படம்)
கோடி ரூபாய் கொடுத்தாலும் கொடுக்க மாட்டேன்! ராகுல் தைத்த காலணி பற்றி தொழிலாளி!

நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளூர்ப் பகுதி மேம்பாட்டுத் திட்டம்(MPLADS) வழிகாட்டுதல்களில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் நிதியிலிருந்து பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு ரூ.1 கோடி வரையிலான பணிகளைப் பரிந்துரைக்க அனுமதிக்கும் என தனது கடிதத்தில் தரூர் கூறினார்.

இந்த துயரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளுக்கு விருப்பமுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாராளமாக நிதி வழங்க முடியும். மீட்பு, நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்கான கடினமான முயற்சிகளை ஆதரிப்பதில் இது நிச்சயமாக விலைமதிப்பற்றதாக இருக்கும். "இந்த கோரிக்கையை உங்கள் அன்பான மற்றும் அனுதாபத்துடன் பரிசீலிப்பீர்கள் என்று நம்புகிறேன்," என்று தரூர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com