
புது தில்லியில் இன்று (ஆக. 2) நடைபெற்ற மக்களவைக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகான், பாஜக அரசையும் மகாபாரதத்தின் சக்கர வியூகத்தையும் ஒப்பிட்டு, ராகுல் காந்தி கடந்த திங்கள்கிழமையில் கருத்து தெரிவித்ததை விமர்சித்து பேசினார்.
சிவராஜ் சிங் பேசியதாவது, ``மகாபாரதத்தைப் பற்றி பாஜக பேசும்போதெல்லாம் கிருஷ்ணரை மட்டுமே நினைவு கூர்ந்து பேசுவோம். ஆனால், அவர் மகாபாரதத்தைக் குறிப்பிடும்போதுகூட, சகுனி, சக்கர வியூகத்தை மட்டுமே நினைவு கூர்ந்தார்.
இந்த வார்த்தைகள் அனைத்தும் அநீதியுடன் இணைக்கப்பட்டுள்ளன” என்று ராகுல் காந்தியின் பெயரைக் குறிப்பிடாமல் விமர்சித்தார்.
மக்களவையில் கடந்த திங்கள்கிழமையில் (ஜூலை 29) மத்திய பட்ஜெட் மீது நடைபெறும் விவாதத்தில் கலந்து கொண்டு ராகுல் காந்தி மகாபாரத சக்கர வியூகத்தை போன்று 21-ஆம் நூற்றாண்டின் சக்கர வியூகத்தை பாஜக அரசின் 6 பேர் கட்டுப்படுத்துவதாக விமர்சித்து பேசியிருந்தார்.
ராகுல் கூறியதாவது: “மகாபாரதத்தில் அபிமன்யூவை சிக்க வைப்பதற்கு சக்கர வியூகம் உருவாக்கப்பட்டு அவர் கொல்லப்படுவார், நான் இதுகுறித்து சிறிது தேடுதலில் ஈடுபட்டேன்.
சக்கர வியூகத்துக்கு மற்றொரு பெயர் பத்ம வியூகம். பத்ம வியூகம் என்றால் தாமரை வியூகம்.
21ஆம் நூற்றாண்டில் புதிதாக சக்கர வியூகம் உருவாக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, அந்த சின்னத்தை நெஞ்சில் தாங்கியுள்ளார்.
அபிமன்யூ இடத்தில் இந்தியாவின் இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள், சிறுகுறு தொழில்கள் உள்ளனர்.
அன்று துரோணர், அஸ்வத்தாமன் உள்பட 6 பேர் சக்கர வியூகத்தை கட்டுப்படுத்தியது போன்று இன்றும் 6 பேர் கட்டுப்படுத்துகின்றனர். மோடி, அமித் ஷா, மோகன் பகவத், அஜித் தோவல் உள்பட இரண்டு தொழிலதிபர்கள்தான்” எனத் தெரிவித்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.