
மேற்கு வங்கத்தில் தொடர்மழையிலும் பாலத்தின்மீது காரில் சென்றவர் பலி.
மேற்கு வங்கத்தின் மேற்கு பர்தமான் மற்றும் புர்பா பர்தமான் மாவட்டங்களில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இடைவிடாமல் பெய்த மழையால் கோபாய் நதி அபாய அளவைவிட அதிகமாக பாய்கிறது; இதனையடுத்து, கங்காலி கோயில் தற்காலிமாக மூடப்பட்டுள்ளது.
மேற்கு பர்தமான் மாவட்டத்தில் உள்ள காசி நஸ்ருல் இஸ்லாம் விமான நிலையத்தில் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், அசன்சோலில் உள்ள கல்யாண்பூர் குடியிருப்புப் பகுதியில் உள்ள பாலம் நீரில் மூழ்கியது. அந்த பாலத்தை தற்காலிமாக பயன்படுத்த வேண்டாம் என்றும் அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இருப்பினும், அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர், தனது காரில் எச்சரிக்கை செய்யப்பட்ட பாலத்தின்மீது சென்றுள்ளார். அந்த சமயத்தில், வெள்ளம் அதிகமாக வந்ததால், நீரோடு நீராக பாலத்தின்மீது சென்று கொண்டிருந்த காரும் அடித்துச் செல்லப்பட்டது. இதனையடுத்து, காரில் இருந்தவரும் நீரில் மூழ்கி, உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து, தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்குச் சென்று, உயிரிழந்தவரின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.