மீட்புப்பணியில் மோப்ப நாய்கள்: பினராயி விஜயன் பெருமிதம்

வயநாடு மீட்புப் பணியில் மனிதர்களுடன் மோப்ப நாய்களும் பணியாற்றுவது மனதை நிறைக்கிறது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
பினராயி விஜயன் (கோப்புப் படம்)
பினராயி விஜயன் (கோப்புப் படம்)
Published on
Updated on
1 min read

வயநாடு மீட்புப் பணியில் மனிதர்களுடன் மோப்ப நாய்களும் பணியாற்றுவது மனதை நிறைக்கிறது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது, வயநாடு மீட்புப் பணியில் மனிதர்களுடன் மோப்ப நாய்களும் பணியாற்றுவது மனதை நிறைக்கிறது. மீட்புப் படையில் சிறப்புப் பயிற்சி பெற்ற நாய்கள் பேருதவி புரிந்து வருகின்றன. மோப்ப நாய்களான மாயா, மர்பி, ஏஞ்சல் ஆகியவற்றால் பல சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இந்திய ராணுவத்தில் காடாவர் நாய்களான ஜாக்கி, டிக்ஸி, சாரா ஆகியனவும் சிறப்பாக பணியாற்றுகின்றன.

பினராயி விஜயன் (கோப்புப் படம்)
சென்னை மற்றும் புறநகர பகுதிகளில் விடிய விடிய மழை

கர்நாடக, தமிழக காவல்படைகளின் நாய்களும் பேரழிவை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. சேற்றில் புதைந்த சடலங்களை பாதகமான சூழலிலும் இவற்றால் நுகர முடிவது பாராட்டுக்குரியது என்றார். வடகேரளத்தில் கடந்த வாரம் பெய்த தொடா் கனமழை எதிரொலியாக முண்டக்கை, சூரல்மலை, ஆரண்மலை உள்ளிட்ட வயநாட்டின் மலைக் கிராமங்களில் செவ்வாய்க்கிழமை பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன.

நிலச்சரிவின்போது வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உயிரோடு மண்ணில் புதைந்தனா். சாலியாற்று வெள்ளத்தில் சிலா் அடித்துச் செல்லப்பட்டனா். மண்ணில் புதையுண்டவா்களையும், காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவா்களையும் மீட்பதற்கான மீட்பு-தேடுதல் பணிகள் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகின்றன.

மாவட்ட நிா்வாக தகவலின்படி கடந்த சனிக்கிழமை இரவு வரை 219 உடல்கள் மற்றும் 143-க்கும் மேற்பட்ட உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 206 பேரை இன்னும் காணவில்லை. உடல்களைக் கண்டறிவதற்கான கூடுதல் வாய்ப்புள்ள பகுதிகளில் மீட்புப் படையினா் முகாமிட்டுள்ளனா். சாலியாற்றில் 40 கி.மீ. தொலைவுக்கு தேடுதல் பணிகள் தொடா்ந்து வருவதாக மாநில சுற்றுலாத் துறை அமைச்சா் பி.ஏ.முகமது ரியாஸ் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com