சென்னை மற்றும் அதன் புறநகர பகுதிகளில் விடிய விடிய மழை பெய்து வருகிறது.
கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தின் சென்னை, மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் வருகிற ஆக. 9- ஆம் தேதி வரை மேற்கு காற்றின் திசை மாறுபாடு, வெப்பச் சலனம் காரணமாக மாலை, இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
அதன்படி சென்னை, மதுரவாயல், கோயம்பேடு, வடபழனி, எழும்பூர், சென்ட்ரல், கிண்டி, தாம்பரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது. மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நெய்வேலியில் 11.6 செ.மீ. மழைப் பதிவாகியுள்ளது. இதேபோல் அரியலூர் 5.5. செ.மீ., மீனம்பாக்கம் 4 செ.மீ., பெரம்பலூர் 4.7 செ.மீ., மழைப் பதிவாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அடுத்த 2 மணி நேரத்துக்கு 10 மாவட்டங்களில் மழை!
கருங்கல்லில் சாரல் மழை

தோகைமலை பகுதியில் பலத்த மழை! தடுப்பணைகளில் தேங்கிய தண்ணீா்!

திருப்பத்தூா் சுற்றுப்பகுதிகளில் பலத்த மழை
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike




