வங்கதேச வன்முறையில் வெளிநாட்டு சதி? ராகுல் கேள்விக்கு ஜெய்சங்கர் பதில்

வங்கதேச விவகாரத்தில் வெளிநாட்டு தொடர்பு இருக்கிறதா என்று ராகுல் கேள்விக்கு ஜெய்சங்கர் பதில் அளித்துள்ளார்.
அனைத்துக் கட்சிக் கூட்டம்
அனைத்துக் கட்சிக் கூட்டம்
Published on
Updated on
1 min read

வங்கதேசத்தில் ஏற்பட்ட போராட்டம், வன்முறையாக மாறி, ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட பிரதமர் ராஜிநாமா செய்த விவகாரத்தில், வெளிநாட்டு தொடர்பு இருக்கிறதா என்று ராகுல் எழுப்பிய கேள்விக்கு, இப்போதைக்கு எதையும் உறுதிசெய்ய இயலாது என ஜெய்சங்கர் பதிலளித்துள்ளார்.

வங்கதேசத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக போராட்டம் வெடித்து பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்துவிட்டு, நாட்டைவிட்டு வெளியேறிய விவகாரம் தொடர்பாக புது தில்லியில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு வந்த தலைவர்கள்
அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு வந்த தலைவர்கள்Manvender Vashist Lav

கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வங்கதேசத்தில் போராட்டம், வன்முறை விவகாரத்தில், வெளிநாட்டு தொடர்பு இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய வெளியுறவு விவகாரத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இந்த விவகாரத்தில் வெளிநாட்டு சதி இருக்கிறதா என்பதை இவ்வளவு சீக்கிரம் சொல்லிவிட முடியாது என்றார்.

அதாவது, வங்கதேச விவகாரத்தில், வெளிநாட்டுத் தொடர்பு இருக்கிறது என்றோ இல்லை என்றோ இவ்வளவு சீக்கிரம் சொல்லிவிட முடியாது, ஆனால், பாகிஸ்தான் தூதர், தனது சமூக வலைதளத்தின் முகப்புப் படத்தை, வங்கதேச வன்முறைக்கு ஆதரவு தெரிவிக்கும்படியான புகைப்படமாக மாற்றியிருக்கிறார் என்று ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

அனைத்துக் கட்சிக் கூட்டம்
ஷேக் ஹசீனாவுக்கு இப்படி நடக்கும் என முன்பே கணித்திருந்தாரா ஜோதிடர்?

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு கட்சித் தலைவர்களுக்கும், மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், வங்கதேசத்தில் நடந்திருப்பது என்ன என்பது குறித்து விளக்கம் அளித்தார். மேலும், வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா எவ்வாறு இந்தியா வந்தடைந்தார் என்றும், அவர் இங்கு தங்கியிருப்பது குறித்தும் கூறினார்.

ஷேக் ஹசீனா இந்தியாவில் தங்கியிருப்பதாகவும், அவரது எதிர்கால திட்டம் பற்றி மத்திய அரசு அறிந்திருப்பதாகவும், அவருக்குப் போதுமான நேரம் கொடுக்கப்படும் என்றும் மத்திய அரசு சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்துக்குப் பின் எஸ். ஜெய்சங்கர் தன்னுடைய சமூக தளமான எக்ஸ் பக்கத்தில், வங்கதேசத்தில் நடந்து வரும் முன்னேற்றங்கள் குறித்து இன்று நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விளக்கமளிக்கப்பட்டது. அனைத்துக் கட்சிகளிடையே ஏற்பட்ட ஒருமித்த ஆதரவையும் புரிதலையும் பாராட்டுகிறேன் என்று விவரித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com