
வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டோரை மீட்கும் பணிகள் இன்று(ஆக. 6) 8-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், பலியானவர்களின் எண்ணிக்கை 391-ஐ கடந்துள்ளது.
வட கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையால் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அதிகாலை பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. அதில் முண்டக்கை, சூரல்மலை உள்பட பல கிராமங்களில் வீடுகளுக்குள் தூங்கிக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் உயிரோடு மண்ணில் புதைந்தனர்.
ராணுவம், கடற்படை, விமானப் படை, தேசிய பேரிடா் மீட்புப் படை, கடலோரக் காவல் படை, காவல் துறை, தீயணைப்புத் துறை உள்பட பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து மண்ணில் புதையுண்டவா்களைத் தேடும் பணியிலும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவா்களின் உடல்களைத் தேடும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனா்.
மண்ணில் புதையுண்டவா்களின் உடல்களை மோப்ப நாய்கள், மனிதா்களை மீட்கும் ரேடாா், ஜிபிஎஸ் தொழில்நுட்பம், ஆளில்லா விமானங்கள், ஹெலிகாப்டா்கள் உதவியுடன் மீட்கும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.
திங்கள்கிழமை இரவு வரை 391 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், 187 பேரை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகள் மட்டுமின்றி ஆறுகளிலும் சடலங்களை தேடி வருகின்றனர்.
நிலச்சரிவுகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள புதுமலையில் அடையாளம் தெரியாத 29 உடல்கள், 184 உடல்பாகங்கள் ஒரே இடத்தில் திங்கள்கிழமையன்று(ஆக. 5) நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.