குஜராத்தில் 5 வயதுக்குக் கீழான குழந்தைகளில் 40% எடை குறைவானவர்கள்!

குஜராத் மாநிலம் பசியின்மை குறியீட்டில் 25 ஆவது இடத்தில் உள்ளதாக தகவல்
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

குஜராத்தில் குறைவான எடை மற்றும் வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருவதாக நிதி ஆயோக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புது தில்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் நிலையான வளர்ச்சி இலக்கு குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது, ``நாட்டின் பொருளாதார ரீதியாக வளர்ந்த மாநிலங்களில் பசியின்மையைக் கொண்டு வருவதிலும், குழந்தைகளிடையே ஊட்டச்சத்தை மேம்படுத்துவதிலும் குஜராத் மாநிலம் பின்தங்கியே உள்ளது. இந்திய மாநிலங்களில் பசியின்மை குறியீட்டில் குஜராத், 25 ஆவது இடத்தில் உள்ளது.

குஜராத்தில் ஐந்து வயதிற்குள்பட்ட குழந்தைகளில் 39.7 சதவிகிதம் பேர் எடை குறைவாகவே காணப்படுகின்றனர். இரண்டாவது வளர்ச்சி இலக்கின் தகவலின்படி, குஜராத் வெறும் 41 புள்ளிகளைப் பெற்று, ஒடிஸா, மத்தியப் பிரதேசம் மற்றும் 23 பிற மாநிலங்களுக்கு பின்னால் உள்ளது.

2020 - 21ஆம் ஆண்டில் குஜராத்தின் இரண்டாவது வளர்ச்சி இலக்கு 46 புள்ளிகளாகவும், 2019 - 20ஆம் ஆண்டில் 41 ஆகவும் இருந்தது. இது இரண்டாவது வளர்ச்சி இலக்கின் செயல்திறனில் தொடர்ச்சியான சரிவைக் குறிக்கிறது.

கோப்புப் படம்
தமிழ்நாட்டில்தான் அதிக அளவு இதய மாற்று அறுவைச் சிகிச்சை!

5 வயதிற்குள்பட்ட குழந்தைகளில் 39 சதவிகிதத்தினர் வளர்ச்சி குன்றியும், 15 முதல் 49 வயதுடைய கர்ப்பிணிப் பெண்களில் 62.5 சதவிகிதம் பேர் இரத்த சோகை குறைபாட்டையும், 25.2 சதவிகிதம் பேர் 18.5-க்கும் குறைவான உடல் நிறை குறியீட்டையும் கொண்டுள்ளனர்.

2018 மற்றும் 2019 ஆண்டுகளை ஒப்பிடும்போது, குறைவான எடை மற்றும் வளர்ச்சி குன்றிய குழந்தைகள் மற்றும் இரத்த சோகை கொண்ட பெண்களின் பாதிப்பு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபை 2015ஆம் ஆண்டில் 17 நிலையான வளர்ச்சி இலக்குகளை நிறுவியது. ஒரு நாட்டிற்கு தேவைப்படும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக நிலையான வளர்ச்சி இலக்குகள் கொண்டு வரப்பட்டது.

கோப்புப் படம்
டாக்காவிலிருந்து 205 இந்தியர்கள் விமானம் மூலம் தாயகம் திரும்பினர்

அகமதாபாத்தில் பொருளாதாரத் துறையில் உதவிப் பேராசிரியர் ஆத்மன் ஷா கூறுகையில், "2030-க்குள் பூஜ்ஜிய பசியை அடைவதற்கு ஊட்டச்சத்தை அதிகரிக்கும் நோக்கில் மையப்படுத்தப்பட்ட முயற்சிகளில், அவசர மற்றும் கணிசமான முதலீடு தேவைப்படுகிறது" என்று கூறுகிறார்.

பல பரிமாண வறுமைக் குறியீடு அமைப்பு 2023ஆம் ஆண்டு வெளியிட்ட தரவுகளின்படி, குஜராத்தின் கிராமப்புற மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 44.45 சதவிகித மக்களும், நகர்ப்புறங்களில் 28.97 சதவிகித்தினர் ஊட்டச்சத்து இல்லாதவர்கள் என்றும் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com