வினேஷ் போகத் தகுதி நீக்கத்துக்குப் பின் மிகப்பெரிய சதி உள்ளது: விஜேந்தர் சிங்!

பாஜக நிர்வாகியும் முன்னாள் குத்துச்சண்டை வீரருமான விஜேந்தர் சிங் ஒலிம்பிக்ஸ் போட்டியில் வினேஷ் போகத் தகுதி நீக்கத்துக்குப் பின் பெரிய சதி உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
விஜேந்தர் சிங் / வினேஷ் போகத்
விஜேந்தர் சிங் / வினேஷ் போகத்
Published on
Updated on
1 min read

ஒலிம்பிக்ஸில் மகளிருக்கான மல்யுத்தப் போட்டியின் இறுதிச்சுற்றுக்குத் தேர்வான வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்குப் பின் மிகப்பெரிய சதி உள்ளது என இந்திய முன்னாள் குத்துச்சண்டை வீரரும், பாஜக நிர்வாகியுமான விஜேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின், மகளிருக்கான மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப் பிரிவுக்கான இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருந்த இந்திய வீராங்கனை வினேஷ் போகத் 100 கிராம் எடை அதிகமாக இருந்ததாக தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், “இது இந்தியாவிற்கும் இந்திய மல்யுத்த வீரர்களுக்கும் எதிரான மிகப்பெரிய சதி. வினேஷ் போகத்தின் விளையாட்டு செயல்பாடு மிகவும் பாராட்டத்தக்கது. சிலருக்கு அந்த மகிழ்ச்சியை ஏற்க முடியாமல் போயிருக்கலாம். 100கிராம் எடையில் என்ன பிரச்னை இருக்கிறது?

அவரது வெற்றியால் யாருக்கோ சில பிரச்னைகள் இருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். அவருக்கு 100 கிராம் எடையைக் குறைக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். நானும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்றிருக்கிறேன். ஆனால், இதுபோன்ற விஷயங்களை என்றும் பார்த்ததில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.

விஜேந்தர் சிங் / வினேஷ் போகத்
வினேஷ் போகத்: 2 கிலோ கூடுதல் உடல் எடை.. இரவு முழுக்க பயிற்சி.. தகுதி நீக்கம்!

ஒலிம்பிக்ஸ் குத்துச் சண்டை போட்டிகளில் கடந்த 2008-ல் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தைப் பெற்றுத் தந்த விஜேந்தர் சிங் தற்போது பாஜக நிர்வாகியாக உள்ளார்.

விளையாட்டு வீரர்கள் உணவு உண்பதை விட எடை கட்டுப்பாட்டில் எந்தளவு கவனம் செலுத்துகிறார்கள் என்பது குறித்து விளக்கிய அவர், “வீரர்களுக்கு மாவுச்சத்தோ புரதச்சத்தோ தேவைப்படாது. எங்களுக்கு எடையை மீட்பது மிக முக்கியம். இறுதிப்போட்டி நடக்க இருப்பதால் எடை கட்டுப்பாடே வினேஷ் போகத்தின் முதல் நோக்கமாக இருந்திருக்கும். பசியைக் கட்டுப்படுத்திக் கொள்வதால், உடல் சோர்வு ஏற்படும். எனவே உடல்நல நிபுணரிடம் செல்வோம். ஆனால், உணவு உட்கொள்ளுதலை விட உடல் எடையே எங்களின் முதல் கவனமாக இருக்கும்” என்று அவர் தெரிவித்தார்.

விஜேந்தர் சிங் / வினேஷ் போகத்
வினேஷ் போகத் தகுதி நீக்கம் குறித்து பிரிஜ் பூஷண் மகன் கருத்து

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com