விஞ்ஞானி, பொறியாளர்களுக்கு விஞ்ஞான் விருதுகள் அறிவிப்பு!

சந்திரயான்-3 திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானிகள், பொறியாளர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
(கோப்புப்படம்)
(கோப்புப்படம்)
Published on
Updated on
2 min read

சந்திரயான்-3 திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானிகள், பொறியாளர்களுக்கு ராஷ்டிரிய விஞ்ஞான் புரஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அரசாங்கத்தால் வழங்கப்படும் மிகஉயர்ந்த அறிவியல் விருதான முதல் விஞ்ஞான் ரத்னா புரஸ்கார் விருதுக்கு புகழ்பெற்ற உயிர் வேதியியலாளர் கோவிந்தராஜன் பத்மநாபன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இளம் விஞ்ஞானிகளுக்கான 18 விஞ்ஞான் யுவ புரஸ்கார் மற்றும் 13 விஞ்ஞான் ஸ்ரீபுரஸ்கார், சந்திரயான்-3 குழுவுக்கான விஞ்ஞான் குழு விருது உள்பட 33 ராஷ்டிரிய விஞ்ஞான் புரஸ்கர் விருதுகளை மத்திய அரசு புதன்கிழமை அறிவித்தது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், அறிவியல், தொழில்நுட்பம், கண்டுபிடிப்புத் துறையில் ஆராய்ச்சியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கண்டுபிடிப்பாளர்களின் சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அறிவியல், தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கான பங்களிப்புகளை அங்கீகரித்து, ராஷ்டிரிய விஞ்ஞான் புரஸ்கார் விருதுகள் மத்திய அரசால் நிறுவப்பட்டது.

விஞ்ஞான்ஸ்ரீ விருது பெற்றவர்கள்

1. வான் இயற்பியல் விஞ்ஞானி அன்னபூரணி சுப்ரமணியன்,

2. வேளாண் விஞ்ஞானி ஆனந்தராமகிருஷ்ணன், அவேஷ் குமார் தியாகி (அணுசக்தி),

3. உமேஷ் வர்ஷ்னி, ஜெயந்த் பால்சந்திர உட்கோன்கர் ( உயிரியல் அறிவியல் துறை),

4. சையத் வாஜி அஹ்மத் நக்வி (பூமி அறிவியல்),

5. பீம் சிங் (பொறியியல் அறிவியல்),

6. ஆதிமூர்த்தி ஆதி, ராகுல் முகர்ஜி (கணிதம் மற்றும் கணினி அறிவியல்),

7. சஞ்சய் பிஹாரி (மருத்துவம்),

8. லட்சுமணன் முத்துசாமி, நாபா குமார் மொண்டல் (இயற்பியல்),

9. ரோஹித் ஸ்ரீவஸ்தவா (தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள்).

விஞ்ஞான் யுவா விருது பெற்றவர்கள்

1. ராதாகிருஷ்ணன் மகாலட்சுமி, அரவிந்த் பென்மட்சா (உயிரியல் அறிவியல்),

2. விவேக் போல்ஷெட்டிவார், விஷால் ராய் (வேதியியல்),

3. ராக்ஸி மேத்யூ கோல் (பூமி அறிவியல்),

4. அபிலாஷ், ராதா கிருஷ்ண காந்தி (பொறியியல் அறிவியல்),

5. புரபி சைகியா, பப்பி பால் (சுற்றுச்சூழல் அறிவியல்),

6. மகேஷ் ரமேஷ் கக்டே (கணிதம் மற்றும் கணினி அறிவியல்),

7. ஜிதேந்திர குமார் சாஹு, பிரக்யா துருவ் யாதவ் (மருத்துவம்),

8. உர்பசி சின்ஹா ​​(இயற்பியல்),

9. திகேந்திரநாத் ஸ்வைன் ஸ்பேஸ், பிரசாந்த் குமார் (விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்),

10. பிரபு ராஜகோபால் (தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு)

11. கிருஷ்ண மூர்த்தி, ஸ்வரூப் குமார் பரிதா (வேளாண் அறிவியல்),

இந்த விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும். பல்வேறு அறிவியல் துறைகளால் வழங்கப்பட்ட 300 விதமான விருதுகளுக்கு பதிலாக இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளன.

சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியதைக் குறிக்கும் வகையில், தேசிய விண்வெளி தினமான ஆகஸ்ட் 23 அன்று குடியரசுத் திரௌபதி முர்மு விருதுகளை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சந்திரயான் 3 திட்டக்குழுவில் தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வீரமுத்துவேல் விருது பெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com