
டார்ஜிலிங்கில் பக்தர்கள் மீது கார் மோதியதில் 6 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம், சவன் மாத கன்வார் யாத்திரையில் பங்கேற்றுவிட்டு பக்தர்கள் சிலர் ஜங்லிபாபா கோயிலுக்கு திங்கள்கிழமை புறப்பட்டனர். டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள முனி தேயிலை தோட்டத்தில் பக்தர்கள் சென்றுகொண்டிருந்தபோது தியோகரில் இருந்து வந்த கார் அவர்களின் பின்னால் மோதியது.
இந்த சம்பவத்தில் 6 பேர் நிகழ்விடத்திலேயே பலியானார்கள். சம்பவ இடத்தில் சடலங்களை மீட்ட காவல்துறையினர் உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விபத்தைத்தொடர்ந்து அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட உறவினர் ஒருவர் கூறுகையில், 'எனது இரண்டு மைத்துனர்களும் விபத்தில் இறந்துவிட்டனர். கார் காரணமாக விபத்து நடந்தது, சடலங்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன, இப்போது நாங்கள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.