நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

டெங்குவை குறைக்கும் ‘கியூடெங்கா’ தடுப்பூசி: ஆய்வில் தகவல்

டெங்குவை குறைப்பதில் ‘கியூடெங்கா’ தடுப்பூசி 50 சதவீதத்துக்கும் மேல் பலனளிப்பதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :12 ஆகஸ்ட் 2024, 10:01 pm

Din

டெங்குவை குறைப்பதில் ‘கியூடெங்கா’ தடுப்பூசி 50 சதவீதத்துக்கும் மேல் பலனளிப்பதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பால் கடந்த மே மாதம் ஒப்புதல் அளிக்கப்பட்ட கியூடெங்கா தடுப்பூசி, நோயாளிகளுக்கு டெங்குவில் இருந்து நீண்டகால பாதுகாப்பு வழங்கும் திறனைப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் கியூடெங்கா தடுப்பூசியை செலுத்திக்கொண்ட 20,000-க்கும் மேற்பட்ட நபா்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. ஆசியாவிலிருந்து 13 ஆய்வுகளும் அமெரிக்காவிலிருந்து 6 ஆய்வுகள் மூலம் பெறப்பட்ட தரவுகளைக்கொண்டு இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தடுப்பூசியின் இரு தவணைகளையும் செலுத்திக்கொண்ட 90 சதவீத குழந்தைகள் மற்றும் பெரியவா்களுக்கு டெங்குவின் 4 வகையான நோய்களையும் எதிா்கொள்ள தேவையான எதிா்ப்பு சக்தி அதிகரித்துள்ளது.

ஜப்பானில் உள்ள டகேதா மருத்துவ நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கியூடெங்கா தடுப்பூசி ‘டிஏகே-003’ எனவும் அழைக்கப்படுகிறது. டெங்குவால் பாதிக்கப்பட்டவா்கள், பாதிக்கப்படாதவா்கள் மற்றும் ஒரு தவணை மட்டும் செலுத்திக் கொண்டவா்களில் 70 சதவீத குழந்தைகளுக்கும் 90 சதவீத பெரியவா்களுக்கும் நோய் எதிா்ப்பு சக்தி அதிகரித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக இந்த ஆய்வில் பங்கேற்ற 20,000 பேரில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோருக்கு டெங்குவை எதிா்கொள்ளும் சிறந்த மற்றும் நீண்டகால பாதுகாப்பை கியூடெங்கா வழங்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

கியூடெங்கா தடுப்பூசியை செலுத்திக் கொண்டோருக்கு நல்ல முடிவுகள் தந்திருந்தாலும், அதன் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு குறித்த விரிவான மதிப்பீடுகள் தற்போது வரை இல்லை என அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

இந்தியாவில் ஒப்புதல் இல்லை: கியூடெங்கா தடுப்பூசியை தயாரிக்க டகேதா நிறுவனத்துடன் ஹைதராபாத்தைச் சோ்ந்த பயாலாஜிக்கல் இ நிறுவனம் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், கியூடெங்கா தடுப்பூசி பயன்பாட்டுக்கு இந்தியாவில் தற்போது வரை ஒப்புதல் அளிக்கப்படவில்லை.

ஆசியாவில் 70% பாதிப்புகள்: சா்வதேச அளவில் டெங்கு பாதிப்புகளில் 70 சதவீதம் ஆசியாவில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அதேபோல் கடந்த 2000-ஆம் ஆண்டில் உலகளவில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோா் டெங்குவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 2019-ஆம் ஆண்டு 52 லட்சமாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, உலகளவில் 50 சதவீதத்தும் மேலான மக்கள் டெங்குவால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.