
4 வங்கதேசத்தினர் இந்தியாவுக்குள் நுழைய முயன்றதாக அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் வன்முறைக்குப் பின் நிலவி வரும் அரசியல் மாற்றத்துக்கு மத்தியில், மத சிறுபான்மையினா் கடுமையாக துன்புறுத்தப்படுவதாக உள்ளூா் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. இதனால், பதற்றமடைந்த வங்கதேச சிறுபான்மையினா் இந்தியாவுக்குள் தஞ்சம் புக முயல்கின்றனா்.
இதன் காரணமாக இந்தியாவின் எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த மத்திய அரசு அண்மையில் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இந்தியா-வங்கதேச எல்லையில் உள்ள கரீம்கஞ்ச் செக்டார் வழியாக இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 4 வங்கதேசத்தினர் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டதாக அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவல், "இன்று அதிகாலை 1:30 மணியளவில், மோதியுர் ஷேக், முஷியர் முல்லா, தானியா முல்லா மற்றும் ரீட்டா முல்லா என அடையாளம் காணப்பட்ட வங்கதேச குடிமக்கள் இந்தியா-வங்காளதேச எல்லையில் உள்ள கரீம்கஞ்ச் செக்டார் வழியாக இந்தியாவுக்குள் நுழைய முயன்றனர்.
உடனடியாக திறம்பட செயல்பட்ட போலீஸார், அவர்களை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தினர். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.