சிறுமி பாலியல் வன்கொடுமை: டிம்பிள் யாதவின் முன்னாள் உதவியாளர் கைது!

சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்கும் நவாப் சிங் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.
Nawab singh
நவாப் சிங் யாதவ், டிம்பிள் யாதவ், அகிலேஷ் யாதவ்Instagram Nawab singh
Published on
Updated on
1 min read

உத்தரப் பிரதேசத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட புகாரில், சமாஜ்வாதி கட்சி எம்.பி. டிம்பிள் யாதவின் முன்னாள் உதவியாளர் திங்கள்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கனௌஜ் பகுதியை சேர்ந்தவர் நவாப் சிங் யாதவ், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவின் உதவியாளராக பணிபுரிந்துள்ளார்.

கட்சிப் பொறுப்புகளில் உள்ள நவாப் யாதவ், அகிலேஷ் யாதவுக்கும் நெருங்கமானவர் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், 15 வயது சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் இன்று அதிகாலை நவாப் யாதவ் கைது செய்யப்பட்டுள்ளார்.

Nawab singh
கருணாநிதி நினைவு நாணயம்: ராஜ்நாத் சிங் வெளியிடுகிறார்

இவரின் கைது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் கனெளஜ் மாவட்ட கண்காணிப்பாளர் அமித்குமார் ஆனந்த் தெரிவித்ததாவது:

“இன்று அதிகாலை 1.30 மணியளவில் போலீஸின் அவசர உதவி எண்ணான 112-க்கு ஒரு அழைப்பு வந்தது. தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சிப்பதாக ஒரு சிறுமி தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் சிறுமியை மீட்டனர். விவரிக்க முடியாத நிலையில் இருந்த நவாப் யாதவ் கைது செய்யப்பட்டார். வேலைக்காக நவாப் இல்லத்துக்கு அந்த சிறுமி தனது அத்தையுடன் வந்துள்ளார். அவரை பாலியல் வன்கொடுமை செய்ய நவாப் முயற்சித்துள்ளார். அந்த சிறுமிக்கு 15 வயது இருக்கும். புதிய குற்றவியல் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

ஏற்கெனவே, அயோத்தியில் 12 வயது சிறுமியை சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த மொய்த் கான் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com