தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நூற்றாண்டு நாணயம் வெளியீட்டு விழா வருகிற ஆக. 18 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆக. 18 ஆம் தேதி மாலை 6.50 மணிக்கு விழா நடைபெற உள்ளது.
இந்த நிகழ்வில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவம் பொறித்த ரூ. 100 நாணயத்தை வெளியிடுகிறார்.
மேலும் இந்த நிகழ்வில் திமுக எம்.பி.க்கள், அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
ரஜினி, கமல் உள்ளிட்ட சினிமா பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்க இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருணாநிதி நூற்றாண்டையொட்டி திமுக அரசு சார்பிலும் கட்சி சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.