
மகாராஷ்டிரம் தேர்தலுக்கு முன்னதாக முதல்வர் பதவியை எதிர்பார்த்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அற்பமாக தலை வணங்குவதாக மத்திய அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் சாடியுள்ளார்.
இதையடுத்து அவர் மேலும் கூறியதாவது,
மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இந்தாண்டு அக்டோபரில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் கடந்த வாரம் மாநில முன்னாள் முதல்வர் தாக்கரே தில்லி சென்று காங்கிரஸ் உயர்மட்டத் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார்.
இதையடுத்து, பாஜக தலைவர்கள் சிலர் தாக்கரே எதிர்க்கட்சியான மகா விகாஸ் அகாதியின் முதல்வர் வேட்பாளராக இருப்பதை உறுதி செய்ய விரும்புவதாகக் கூறினார்.
முதல்வர் பதவிக்காக அற்ப மனிதர்களின் காலில் விழுகிறார் என உத்தவ் தாக்கரேவை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் கடுமையாக சாடியுள்ளார்.
முற்றிலும் மதச்சார்பற்றவராக மாறிவிட்டார் உத்தவ் தாக்கரே, அவரது தந்தை பாலாசாகேப் தாக்கரேவின் குணங்களில் ஒரு சதவீதம் கூட அவரிடம் இல்லை.
அமைதியின்மையை எதிர்கொண்டுள்ள வங்கதேசத்தில் இந்துக்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல்களை உத்தவ் தாக்கரே கண்டிக்கவில்லை என்றும் ஜாதவ் விமர்சித்தார்.
உத்தவ் தாக்கரே எங்களைத் துரோகிகள் என்று அழைக்கும் அதே நேரத்தில் சிவசேனாவின் சித்தாந்தத்தை அவர் கைவிட்டார் என்று அவர் கூறினார்.
ஜூன் 2022இல் சிவசேனா தலைமைக்கு எதிராக ஷிண்டே தலைமையிலான கிளர்ச்சிக்குப் பிறகு, கட்சி பிளவுபட்டு, உத்தவ் தாக்கரே தலைமையிலான அப்போதைய மகாவிகாஸ் அரசின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.