
கேரளத்தில் அடுத்த சில நாள்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கேரளத்தில் செவ்வாய்க்கிழமை(ஆக. 13) பத்தனம்திட்டா, இடுக்கி மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கையும், வயநாடு உள்பட கண்ணூர், கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு ஆகிய 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 16-ஆம் தேதி வரை மழை தொடருமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆக. 20-ஆம் தேதி வரை வயநாடு மாவட்டத்தில் அதிலும் குறிப்பாக மலையோரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று கல்பேட்டாவில் அமைந்துள்ள ‘சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்கு உயிரியல் மையம்’ எச்சரிக்கை விடுத்துள்ளது.
முன்னதாக, வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்படக்கூடும் என்ற முன்னெச்சரிக்கையை பேரிடர் நிகழ்வதற்கு சுமார் 16 மணி நேரம் முன்கூட்டியே, அதாவது திங்கள்கிழமை(ஆக. 29) காலை 9 மணிக்கு மாவட்ட நிர்வாகத்திடம் இந்த மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த மையம் கணித்தது போலவே மறுநாள்(ஆக. 30) அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.