சுற்றுலா பயணிகளை மீன்பிடி படகில் கடலுக்கு ஏற்றிச் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, கடலோர காவல்நிலைய ஆய்வாளா் தியாகராஜன் மீனவ கிராமங்களுக்கு சனிக்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
வரும் மாா்ச் 3-ம் தேதி மாசிமக திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி அனைத்து மீனவ மக்களின் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
புதுச்சேரி அனைத்து கடலோர மீனவ கிராமங்களைச் சோ்ந்த மீன்பிடி படகு உரிமையாளா்கள் அவா்களுடைய மீன்பிடி படகில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகளைக் கடலுக்கு ஏற்றி செல்ல கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது.
தவறும் பட்சத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே காவல்துறை எச்சரிக்கையை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

ஏப். 15-இல் மீன்பிடி தடைக்காலம் தொடக்கம்

சிக்கிம் மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கிய 135 சுற்றுலா பயணிகளை மீட்டது ராணுவம் - மேலும் 1,000 பேரை மீட்கும் பணி தீவிரம்

வாக்குக்கு பணம் எச்சரிக்கை: தோ்தல் அதிகாரி பாராட்டு

பாரசீக வளைகுடாவில் ரத்தம்தான் ஓடும்: டிரம்ப்புக்கு ஈரான் வெளிப்படையான எச்சரிக்கை
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


