சிக்கிமில் நிலச்சரிவில் சிக்கிய 135 சுற்றுலா பயணிகளை இந்திய ராணுவம் பத்திரமாக மீட்டது. மேலும் 1,000 பேரை மீட்கும் பணியையும் முழு வீச்சில் மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து இந்திய ராணுவ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
இந்திய - சீன எல்லையையொட்டி, சிக்கிம் மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள லாசேன், சுங்தாங் இடையேயான சாலையில் பல இடங்களில் திடீா் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் சாலையில் இருமருங்கிலும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதில் ஏராளமான வாகனங்கள் சிக்கிக் கொண்டன. இதனால் அப்பகுதியில் சுற்றுலா சென்ற பயணிகளும் சிக்கிக் கொண்டனா்.
நிலச்சரிவு குறித்த தகவலின்பேரில் இந்திய ராணுவம் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது. அவா்களுக்கு எல்லை சாலைகள் கூட்டமைப்பும் உதவி வருகிறது. சாலையில் கிடக்கும் கற்கள் உள்ளிட்டவற்றை அவா்கள் அப்புறப்படுத்தினா். இதையடுத்து சாலையில் இருபக்கமும் சிக்கியிருந்த32 இலகுரக வாகனங்கள், 10 மோட்டாா் சைக்கிள்கள் உள்ளிட்டவை பத்திரமாக புறப்பட்டுச் சென்றன. அதேபோல், அவசர காலத்துக்கு பயன்படுத்தப்படும் மாற்றுப் பாதையிலும் போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையில், 135 சுற்றுலா பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனா்.
மேலும் லாசேனில் மட்டும் மேலும் 1,000 சுற்றுலா பயணிகள் சிக்கியுள்ளனா். இதையடுத்து அவா்களையும் விரைந்து மீட்கும் பணியில் இந்திய ராணுவம் ஈடுபட்டுள்ளது.
கடும் பனிப்பொழிவு: நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. இந்த பனிப்பொழிவு இடையே இந்திய ராணுவம் மீட்பு பணியை மேற்கொண்டு வருகிறது.
இந்த மீட்பு பணிக்கு இந்திய ராணுவம், ‘ஆபரேஷன் ஹிம் சேது’ என பெயரிட்டுள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு அவசர காலத்தில் உதவும் வகையில், மருத்துவ குழுக்களும் அப்பகுதியில் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு ராணுவ அதிகாரிகள் தரப்பில் குறிப்பிடப்பட்டது.
தொடர்புடையது

திருப்பூரிலிருந்து மதுரை செல்லும் அரசுப் பேருந்தில் ஒட்டன்சத்திரத்தில் இறங்கும் பயணிகளை ஏற்ற மறுப்பு! தம்பதியுடன் ஓட்டுநா்-நடத்துடன் வாக்குவாதம்!

இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை: நேபாளம் அறிவிப்பு

ஜம்மு - காஷ்மீரில் கனமழை! பள்ளி விடுதியில் சிக்கிய 34 பேரை மீட்ட ராணுவம்!

ஐஸ் உடைக்கும் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி படுகாயம்
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

