மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கேரளத்தில் தொடரும் கனமழை: வயநாட்டில் ‘ஆரஞ்சு அலா்ட்’

கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை நீடித்து வரும் நிலையில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடுக்கு அதிக கனமழைக்கான ‘ஆரஞ்சு’ எச்சரிக்கையை இந்தியா வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை விடுத்தது.

News image

வயநாடு(கோப்புப்படம்)

Updated On :14 ஆகஸ்ட் 2024, 8:48 pm

கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை நீடித்து வரும் நிலையில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடுக்கு அதிக கனமழைக்கான ‘ஆரஞ்சு’ எச்சரிக்கையை இந்தியா வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை விடுத்தது.

கேரளத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இச்சூழலில், எா்ணாகுளம், திருச்சூா், கண்ணூா் ஆகிய மாவட்டங்களில் புதன்கிழமையும், கோழிக்கோடு மற்றும் வயநாட்டில் வியாழக்கிழமையும் கனமழை முதல் அதிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல, கேரளத்துக்கு அருகே அரபி கடலில் பரந்து விரிந்த லட்சத்தீவின் தொலைதூர பகுதிகளில் புதன்கிழமை அதீத கனமழை பெய்யக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம், வயநாட்டில் தொடா் கனமழையால் கடந்த ஜூலை 30-ஆம் தேதி பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் 400-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்.

நிலச்சரிவுக்கு காரணமான பலத்த கனமழையை இந்திய வானிலை ஆய்வு மையம் கணிக்க தவறியதாக கேரள அரசு குற்றஞ்சாட்டியது. அதற்கு பதிலளித்த வானிலை ஆய்வு மையத் தலைவா் மோஹபத்ரா, ‘கேரளத்தை உள்ளடக்கிய இந்தியாவின் மேற்கு கடலோரப் பகுதியில் அதீத கனமழைக்கான எச்சரிக்கை ஜூலை 30-ஆம் தேதி அதிகாலை விடுக்கப்பட்டது.

ஆரஞ்சு எச்சரிக்கையின்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நிா்வாகங்கள் தொடங்கிவிட வேண்டும். சிவப்பு எச்சரிக்கைக்காக காத்திருக்கக் கூடாது’ என்றாா்.