
அதானி குழுமத்துக்கு மின் உற்பத்தி துறையில் சலுகை வழங்கப்பட்டுள்ளது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியை இந்தியாவில் மின் உற்பத்தி செய்து மீண்டும் வெளிநாட்டுக்கு விற்பனை செய்வதற்கான அனுமதி அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:
“தனக்கு பிடித்தமானவர்களுக்கு சலுகை வழங்க வேண்டுமென்றால், நமது பயலாகிக்கல் பிரதமர் மின்னல் வேகத்தில் செயல்படுவார்.
ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியை ஜார்கண்டில் மின் உற்பத்தி செய்யப்பட்டு மீண்டும் வங்கதேசத்துக்கு விற்பனை செய்கிறது அதானி குழுமம்.
மின் கொள்முதல் ஒப்பந்தம் மூலம் இதுபோன்று சர்ச்சைக்குரிய வகையில் செய்ய அனுமதிக்கப்பட்ட ஒரே நிறுவனம் அதானி குழுமம்தான்.
தற்போது, இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலும் மின் விற்பனை செய்ய இந்த நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
ஏற்கெனவே, அதானி குழுமத்துக்கும் செபி தலைவர் மாதவி புரி புச் இடையேயான தொடர்பு குறித்து ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் கட்டுரை சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், மீண்டும் அதானி குழுமத்துக்கு மத்திய அரசின் சலுகை பேசுபொருளாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.