
கேஜரிவால் நவீனகால சுதந்திரப் போராட்ட வீரர் என்று உள்துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் தெரிவித்தார்.
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சிறையில் உள்ளதால் சத்ரசல் மைதானத்தில் தில்லி உள்துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.
கொடியேற்றிய பின்னர் அவர் கூறியதாவது, கேஜரிவால் நவீன காலத்தின் சுதந்திரப் போராட்ட வீரர் என்று நான் பெருமையுடன் சொல்ல முடியும், ஏனென்றால் தண்டனையை ஏற்றுக்கொண்ட அவர் சிறைக்குச் சென்றும் தில்லி மக்களுக்காகப் பாடுபடுகிறார். ஆனால், ஜனநாயக சக்திகளுக்கு முன்னால் அவர் தலை வணங்கவில்லை என்றார்.
தில்லியில் உள்ள மக்களுக்கு தரமான கல்வி, சுகாதாரம், இலவச மின்சாரம் மற்றும் உலகத்தரம் வாய்ந்த போக்குவரத்து வசதிகளை வழங்குவதன் மூலம் நாட்டை முன்னேற்றும் முயற்சியை கேஜரிவால் தொடங்கினார்.
கலால் கொள்கை வழக்கில் கேஜரிவால் கடந்த மார்ச் 21ம் தேதி கைது செய்யப்பட்டு தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் ஜனநாயகம் எந்த சக்தியாலும் பலவீனப்படுத்த முடியாத அளவுக்கு வலிமையானது, முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிறையிலிருந்து விடுவித்ததே அதற்கு உறுதியான உதாரணம் என்றார்.
கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி கலால் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட சிசோடியாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
ஆம் ஆத்மி தலைமையிலான தில்லி அரசு, கேஜரிவால் விரும்புவதுபோல் இலவச மின்சாரம், கல்வி, சுகாதாரம் மற்றும் பெண்களுக்கு இலவச பேருந்து பயணங்களைத் தொடர்ந்து அளிக்கும் என்று கெலாட் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.