பெண்கள் பாதுகாப்புக்கு இரவுக் காவலர்கள் திட்டம்! மே.வங்க அரசு ஆலோசனை
பெண் மருத்துவர் பாலியல் கொலையைக் கண்டித்து நாடெங்கிலும் மருத்துவர்கள் போராட்டம்...


கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவ மேற்படிப்பு பயிற்சி பெற்று வந்த 31 வயதான பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த மருத்துவ உலகையும் பேரதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது.
இந்த சம்பவத்தைக் கண்டித்து நாடெங்கிலும் மருத்துவர்கள் ஓரணியில் திரண்டு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்த நிலையில், இரவு வேளைகளில் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், பெண்களுக்கு உதவியாகவும், பெண் தன்னார்வலர்களைக் கொண்டு ‘ராத்திரெர் ஷாதி’ என்கிற திட்டத்தை அறிமுகப்படுத்த, மேற்கு வங்க அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இத்திட்டத்தின் மூலம், அரசு மருத்துவமனைகள் மருத்துவக் கல்லூரிகள், விடுதிகள் மற்றும் பிற இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் உருவாக்கப்படும் என்றும், இத்திட்டம் குறித்து மூத்த உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டிருப்பதாகவும், வெகுவிரைவில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...