
புது தில்லி: தனது சகோதரியை, கணவர் வீட்டார் மோசமாக நடத்துவதைப் பார்க்கும் இளைஞர் உணர்வுப்பூர்வமாக பாதிப்படைவது இயற்கையானது என்று, இளைஞருக்கு இந்திய தண்டனை சட்டம் 304ன் கீழ் அளிக்கப்பட்ட தண்டனையை உச்ச நீதிமன்றம் மாற்றியிருக்கிறது.
இளைஞர் ஒருவருக்கு இந்திய தண்டனை சட்டம் 304-ன் (குற்றமற்ற கொலைக்கான தண்டனை கொலைக்கு சமம் அல்ல) கீழ் விதிக்கப்பட்ட தண்டனையை மாற்றியமைத்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.
ஹுசைன்பாய் (தண்டனை பெற்றவர்), சம்பவம் நடந்த போது, 18 வயதேயானவராக இருந்துள்ளார். அப்போது அவர் பள்ளியில் 12ஆம் வகுப்புதான் படித்து வந்துள்ளார். அவரது சகோதரிக்கும், சகோதரியின் கணவர் அப்பாஸ்பாய்க்கும் இடையே குடும்பச் சண்டை இருந்துள்ளது. ஒரு இளைஞருக்கு, தனது சகோதரி, கணவர் வீட்டாரால் மோசமாக நடத்தப்படுவதைப் பார்க்கும்போது உணர்வுப்பூர்வமாக பாதிக்கப்படுவது இயற்கையானதுதான், அந்த நிலையில்தான், வாய்த் தகராறு முற்றி கைகலப்பாகியிருக்கிறது, சம்பவம் நடந்தபோது, ஹுசைன்பாய் மற்றும் அவரது தந்தை அஸ்கர் அலியின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சம்பவம் நடந்துகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக, பாலத்தின் அடியில் அதிகளவு தண்ணீர் ஓடியதால், விலைமதிப்பற்ற உயிரிழப்பு மற்றும் ஒரு சிலர் காயம் ஏற்படுத்த வழிவகுத்த அந்த துரதிருஷ்டவசமான சம்பவம் நொடியில் நடந்தது என்றும் உச்ச நீதிமன்ற அமர்வு குறிப்பிட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் வழக்குரைஞர் நிகில் கோயல், அரசு தரப்பில் மூத்த வழக்குரைஞர் அர்ச்சனா பதக் தவே, எதிர்தரப்பு சார்பில் மூத்த வழக்குரைஞர் மீனாட்சி அரோரா ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.
மேல்முறையீடு செய்திருப்பவர், ஒரு இளைஞனாக இருந்தபோது, உணர்ச்சி வேகத்தால் ஆட்கொள்ளப்பட்டார், அதுதான், இறந்தவரையும் அவரது மகனையும் (சகோதரியின் கணவர்) உடல் ரீதியாக தாக்குவதற்குக் காரணமாக அமைந்தது. உயிரிழப்பையும் ஏற்படுத்தியது என்று நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.
மேலும், மனுதாரரின் மேல்முறையீட்டை பாதியளவில் விசாரணைக்கு அனுமதித்து, ஐபிசியின் 304வது பிரிவின் கீழ், மேல்முறையீட்டாளரின் தண்டனையை மாற்றி, அவர் ஏற்கனவே அனுபவித்த காலத்திற்கு தண்டனையை குறைத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.