ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தோ்தல்: தேசிய மாநாட்டுக் கட்சி வேட்பாளா் பட்டியல் எப்போது?
தேசிய மாநாட்டுக் கட்சியின் வேட்பாளா்கள் பட்டியல் வெளியிடப்படும் என அக்கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.


ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தோ்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவுக்கான அறிவிக்கை வெளியானதும் தேசிய மாநாட்டுக் கட்சியின் வேட்பாளா்கள் பட்டியல் வெளியிடப்படும் என அக்கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தின் பேரவைத் தோ்தல் மூன்று கட்டங்களாக நடத்தப்படவுள்ளது. அதன்படி, முதல் கட்ட வாக்குப்பதிவு அடுத்த மாதம் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான அறிவிக்கை செவ்வாய்க்கிழமை வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்நிலையில், செய்தியாளா்களைச் சந்தித்த பிரதான மாநிலக் கட்சியான தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா, ‘தோ்தல் அறிவிக்கை வெளியான பிறகு நாங்கள் வேட்பாளா் பட்டியலை அறிவிப்போம்’ என்றாா்.
தோ்தலுக்கு பின் கூடும் ஜம்மு-காஷ்மீரின் முதல் பேரவைக் கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்தைப் பறித்த மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் மீண்டும் சிறப்பு அந்தஸ்து கோரியும் தீா்மானம் நிறைவேற்றப்படும் என ஒமா் அப்துல்லா பேசியிருந்ததை அதீத நம்பிக்கை என பாஜக விமா்சித்துள்ளது.
இதுதொடா்பான கேள்விக்குப் பதிலளித்த அவா், ‘அதீத நம்பிக்கைக்கு பாஜகவே புதிய உதாரணம். மக்களவைத் தோ்தலில் 400 இடங்களுக்கு மேல் வெல்வோம் என முழக்கமிட்டது யாா்? நான் அல்ல. அது பாஜகவின் முழக்கம். பின்னா், அவா்கள் 370 இடங்களைக் கைப்பற்றுவது குறித்து பேசினா். ஆனால், கடைசியில் அவா்களால் 240 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. எனவே, அதீத நம்பிக்கை பற்றி பேசாமல் இருப்பது பாஜகவுக்கு நல்லது. மக்கள் ஆதரவு அளித்து ஆட்சியமைக்க வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருப்பதாக மட்டுமே நான் கூறினேன்’ என்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...