ரயில்கள் தடம் புரள்வதன் காரணம் என்ன? தடுப்பது எப்படி?

ரயில்களில் அதிக சுமை ஏற்றுதல், போதிய பராமரிப்பில்லாத ரயில் தடங்களே முக்கியக் காரணங்கள்
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

ஒரு ரயில், அதன் தடங்களில் இருந்து விலகும்போது, தடம் புரள்வது நிகழ்கிறது. ரயில் தடம் புரள்வதால், உயிரிழப்பு, காயங்கள், போக்குவரத்து பாதிப்பு, குறிப்பிடத்தக்க இடையூறு உள்ளிட்ட பேரழிவு விளைவுகளுக்கு வழிவகுக்கிறது. இந்த சம்பவங்கள் கணிசமான பொருளாதார இழப்புகளையும் ஏற்படுத்துகின்றன.

இது, ரயில்வே உள்கட்டமைப்பின் நிலை குறித்து கடுமையான எச்சரிக்கைகளை எழுப்புகிறது.

ரயில் தடம் புரள்வதால் ஏற்படும் விபத்துக்களுக்கு பல காரணிகள் பங்களிக்கின்றன.

தண்டவாளங்கள், உள்கட்டமைப்பின் மோசமான பராமரிப்பு முதலானவை, ரயில் தடம் புரளுவதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்றாகும். இந்தியாவில் உள்ள பல ரயில் தடங்கள் பழைமையானவை, சில காலாவதியானவைகூட; இந்த மாதிரியான தண்டவாளங்கள் தேய்மானத்திற்கு வழிவகுக்கிறது. இது தடம் புரளும் அபாயத்தை, கணிசமாக அதிகரிக்கிறது.

கோப்புப் படம்
சொல்லப் போனால்... பிளாஸ்டிக் துண்டுகள் தங்கச் சில்லுகளாவது எப்படி?

முறையற்ற சீரமைப்பு, எச்சரிப்பூட்டும் கருவிகளின் பற்றாக்குறை, பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகளின் பராமரிப்பு முதலானவை பிற காரணிகளில் அடங்கும்.

ரயில்களில் அதிகளவில் பயணிக்கும் பயணிகளால் உண்டாகும் சுமை, சரக்கு ரயில்களில் அதிக சுமை ஏற்றுவதால், நிலைமை மேலும் மோசமாகிறது.

இந்தியாவின் ரயில்வே நெட்வொர்க், உலகின் பரபரப்பான துறைகளில் ஒன்றாகும்; தினமும் மில்லியன் கணக்கான பயணிகள் மற்றும் டன் கணக்கில் சரக்குகள் கொண்டு செல்லப்படுகின்றன.

ரயில்களில் அதிகளவிலான எடையை ஏற்றுவதால், தண்டவாளங்கள் மற்றும் சக்கரங்களில் அதிகப்படியான அழுத்தம் ஏற்படுகிறது; இதன்காரணமாகவும் விபத்துக்களுக்கு ஏற்படுகின்றன.

அதுமட்டுமின்றி ஓட்டுநர் சோர்வு, போதிய பயிற்சியின்மை, அலட்சியம், தகவல் தொடர்பு செயலிழப்பு போன்றவையாலும் விபத்துகள் ஏற்படுகின்றன.

மேலும் தீவிர வானிலை, நிலச்சரிவு, வெள்ளம் போன்ற இயற்கை காரணிகளும் ரயில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. உதாரணமாக, அதிக மழைப்பொழிவால், தடங்கள் பலவீனமாகி, தடம் புரளச் செய்ய வழிவகுக்கும். நிலச்சரிவு, வெள்ளத்தால் தண்டவாளங்களின் உள்கட்டமைப்பு பாதிப்படைகிறது.

கோப்புப் படம்
மாணவன் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் : ராஜஸ்தானில் இணையச் சேவை முடக்கம்; பள்ளிகள் மூடல்

இந்திய ரயில் விபத்துகள் குறித்து இந்திய ரயில்வேயின் முன்னாள் தலைமை பொறியாளர் அலோக் வர்மா தெரிவித்ததாவது, ரயில் வழித்தடங்கள் அமைக்கப்பட வேண்டிய பல இடங்களில், தண்டவாளங்களுக்கு பதிலாக, தேசிய நெடுஞ்சாலையின் விரைவுச் சாலைகள் சேர்க்கப்படுகின்றன.

இந்தியாவில் 1995 முதல் 5,000 கி.மீ. புதிய ரயில் பாதைகள் உருவாக்கப்பட்டுள்ளது; அதே நேரத்தில், சீனா 90,000 கி.மீ. விரிவுபடுத்தியுள்ளது.

சிக்னல் செயலிழப்பு, ஆயிரக்கணக்கான தடங்கள், சக்கரங்கள், ரயில் தொடர்புடைய பிற உபகரணங்களின் செயலிழப்பு ஆகியவற்றால், ஆண்டுதோறும் இந்திய ரயில்வேயில் 1 லட்சத்திற்கும் அதிகமான விபத்துகள் ஏற்படுகின்றன.

இந்த நிலையில், விமான நிலையம் உருவாக்க ரூ. 50,000 கோடி செலவழித்து என்ன பயன்? என்று கூறுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com