
மலையாள திரைப்படத் துறையில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலின சமத்துவம் குறித்த பிரச்சினைகளை ஆய்வு செய்வதற்காக, நீதிபதி ஹேமாவின் தலைமையிலான ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது.
மலையாள திரைப்படத் துறையில் பணிபுரியும் பெண்களின் நிலைமைகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட ஹேமா கமிட்டியின் அறிக்கையை கேரள அரசு இன்று (ஆக. 19) வெளியிட்டது. இந்த அறிக்கை 51 பேரின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டது.
அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, மலையாள திரைப்படத் துறையானது சில தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. அவர்கள், தங்களுக்கு எதிராக பேசுபவர்களின் வாழ்க்கையை அழிக்க, அதிகாரத்தைப் பயன்படுத்துகிறார்கள்.
இதனால்தான், திரைத்துறையில் உள்ள எவரும், அதிகாரக் குழுவைச் சேர்ந்த எவரையும் எதிர்த்துப் பேசத் துணிவதில்லை; அவ்வாறு பேசினால், அவர்கள் தொழில்துறையிலிருந்து நீக்கப்படுவர்.
கலை மற்றும் நடிப்பின் மீதான ஆர்வத்தின் காரணமாகவே, ஒரு பெண் திரைப்படத் துறைக்கு வருகிறார். ஆனால், பணம் சம்பாதிக்கவும், புகழுக்காகவும் சினிமாவுக்கு வருகிற பெண்கள், எதற்கும் சரணடைவார்கள் என்று ஒரு பொதுவான கண்ணோட்டம் உள்ளது.
ஒரு திரைப்படத்தில் வாய்ப்பு பெறுவதற்கு வருகிற எந்தவொரு பெண்ணும், எந்தவொரு ஆணுடனும் படுக்கையைப் பகிர்வார்கள் என்ற எண்ணங்களும் நிலவி வருகிறது. இதுகுறித்து, யாராவது புகார் அளித்தால், குடும்பங்களைக் குறிவைக்கப்படும் என்று அச்சுறுத்தப்படுவதால், துன்புறுத்தலுக்கு ஆளானவர்கள் காவல்துறையை அணுக தயங்குகின்றனர்.
ஒரு பெண் ஒரு பிரச்சனையை உருவாக்குபவர் என்ற கருத்து வெளிவந்தால், அவர் மீண்டும் சினிமாவுக்கு அழைக்கப்பட மாட்டார். எனவே, நடிப்பில் ஆர்வம் கொண்ட பெண்கள், அனைத்து அட்டூழியங்களையும் அமைதியாக அனுபவிக்கின்றனர்.
இல்லையெனில், அவர்களுக்கு ஊதிய ஏற்றத்தாழ்வுகள், தனியுரிமை இல்லாமை, தொழிற்துறையில் பெண்களுக்கான அடிப்படை வசதிகள், கழிப்பறைகள் போன்ற அடிப்படை வசதிகள் கூட மறுக்கப்படுகின்றன.
ஜூனியர் கலைஞர்கள் திரைப்படத் துறைக்கு வர விரும்பினால், குறிப்பிட்டவர்களின் பாலியல் கோரிக்கைகளைச் சரிசெய்து சமரசம் செய்தால் மட்டுமே, அவர்களுக்கு சினிமாவில் வாய்ப்பு வழங்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.