ஒலிம்பிக் கிரிக்கெட் வெற்றியை குறிவைக்கிறாரா பாட் கம்மின்ஸ்?

ஒலிம்பிக் கிரிக்கெட்டில் விளையாட ஆர்வமாக இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
Pat cummins
பாட் கம்மின்ஸ் (கோப்புப் படம்)
Published on
Updated on
1 min read

ஒலிம்பிக் கிரிக்கெட்டில் விளையாட ஆர்வமாக இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

வருகிற 2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெறும் என சர்வதேச ஒலிம்பிக் குழு தரப்பில் ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெறும் என கூறப்பட்டாலும், எத்தனை அணிகள் பங்கேற்கலாம், மற்ற விதிமுறைகள் போன்ற விவரங்கள் எதுவும் ஒலிம்பிக் குழு தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.

Pat cummins
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு!

இந்த நிலையில், ஒலிம்பிக் கிரிக்கெட்டில் விளையாட ஆர்வமாக இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

கடந்த 2021 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் அங்கம் வகித்த பாட் கம்மின்ஸ், ஆஸ்திரேலிய அணிக்கு அண்மையில் இரண்டு ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை என இரண்டு இறுதிப்போட்டிகளிலும் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியாவுக்கு கோப்பையை வென்று கொடுத்தார். தொடர்ச்சியான ஐசிசி கோப்பை வெற்றிகளைத் தொடர்ந்து, ஒலிம்பிக் கிரிக்கெட் வெற்றியை பாட் கம்மின்ஸ் குறிவைத்துள்ளதாகத் தெரிகிறது.

Pat cummins
இந்தியாவுக்கு எதிராக இந்த இரண்டு ஆல்ரவுண்டர்களை களமிறக்குவோம்: பாட் கம்மின்ஸ்

ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டில் விளையாடுவது குறித்து பாட் கம்மின்ஸ் பேசியதாவது: ஒலிம்பிக் கிரிக்கெட்டில் விளையாடுவது சிறப்பானதாக இருக்கும். பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளை பார்த்த பிறகு, ஒலிம்பிக் கிரிக்கெட்டில் விளையாட ஆர்வமாக இருக்கிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு இன்னும் நான்கு ஆண்டுகள் இருக்கின்றன. அதற்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால், ஒலிம்பிக்கில் ஆஸ்திரேலியாவுக்காக விளையாடுவது மிகவும் சிறப்பான விஷயமாக இருக்கும் என்றார்.

பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி அதன் சொந்த மண்ணில் வருகிற நவம்பரில் இந்தியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com