
ரக்ஷா பந்தன் பண்டிகையையொட்டி ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியும் சமூக வலைத்தளத்தில் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளனர்.
வடமாநிலங்களில் மிகவும் பிரபலமாக ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அண்ணன்-தங்கைக்கு இடையிலான பாசப் பிணைப்பை பறைசாற்றும் வகையில் ஆண்டுதோறும் ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது.
இதுதொடர்பாக ராகுல் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
ரக்ஷா பந்தன் திருநாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். அண்ணன்-தங்கைக்கு இடையிலான உடைக்க முடியாத அன்பையும் பாசத்தையும் பறைசாற்றும் ஒரு பண்டிகை.
இது பாதுகாப்புக் கயிறு எப்போதும் உங்கள் புனிதமான உறவை வலுப்படுத்தட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று பிரியங்கா காந்தி வெளியிட்ட பதிவில்,
ரக்ஷா பந்தன் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகின்றது. இதை நினைவுகூரும் வகையில், அண்ணன்-தங்கை இடையேயான உறவு ஒரு பூச்செடி போன்றது.
அதில் வெவ்வேறு வண்ணங்களின் நினைவுகள், ஒற்றுமையின் கதைகள், மரியாதை, அன்பு மற்றும் பரஸ்பர புரிதல், நட்பை ஆழமாக்குவதற்கான உறுதிப்பாடு அடித்தளத்திலிருந்து செழித்து வளரும் என்று என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.