பொதுத்துறை வங்கிகள் வைப்புத் தொகையை அதிகரிக்க நிதியமைச்சர் வலியுறுத்தல்

பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடு -நிதியமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்
பொதுத்துறை வங்கிகள் வைப்புத் தொகையை அதிகரிக்க நிதியமைச்சர் வலியுறுத்தல்
படம் | பிடிஐ
Published on
Updated on
2 min read

பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடு குறித்த ஆய்வுக் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று(ஆக. 19) புதுதில்லியில் நடைபெற்றது.

பொதுத்துறை வங்கிகள் வைப்புத் தொகையை அதிகரிக்க நிதியமைச்சர் வலியுறுத்தல்
சொல்லப் போனால்... பிளாஸ்டிக் துண்டுகள் தங்கச் சில்லுகளாவது எப்படி?

வங்கிகளில் கடந்த சில மாதங்களாக, கடன் வளர்ச்சியைவிட 300 - 400 அடிப்படைப் புள்ளிகள் குறைவாகவே வைப்புத் தொகை முதலீடுகள் வளர்ச்சியடைந்துள்ளன. இதன் காரணமாக, வங்கிகளின் செயல்பாடுகளில் குறுக்கீடு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடன் வழங்குதல் செயல்முறையில் வளர்ச்சி அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டி இம்மாத தொடக்கத்தில் பேசியிருந்த நிர்மலா சீதாராமன், “இன்று(ஆக. 19), நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் வைப்புத் தொகையை அதிகரிப்பதன் முக்கியத்துவம் குறித்து வங்கிகளுடன் கலந்தாலோசிக்கப்படும்” என தெரிவித்திருந்தார். இந்திய ரிசர்வ் வங்கி, வட்டி விகித நடைமுறைகளில் வங்கிகளுக்கு கூடுதல் சுதந்திரம் அளித்துள்ளது. இதனை பயன்படுத்தி வங்கிகள் வைப்புத் தொகையை ஈர்க்கவும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

பொதுத்துறை வங்கிகள் வைப்புத் தொகையை அதிகரிக்க நிதியமைச்சர் வலியுறுத்தல்
சொல்லப் போனால்... இந்தச் சிலைகள் செய்த பாவம் என்ன?
படம் | பிடிஐ

இந்த நிலையில், 2024-25ஆம் நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டபின் வங்கிகளின் செயல்பாடு குறித்த முதல் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் நிதிச்சேவைகள் துறை செயலர் - முனைவர் விவேக் ஜோஷி உள்பட பொதுத்துறை வங்கிகளின் மேலாண் இயக்குநர்களும், முதன்மைச் செயல் அதிகாரிகளும், மூத்த அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் முக்கியமாக, வங்கிகளின் வைப்புத் தொகை முதலீடுகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, கடனுக்கும் முதலீட்டுக்குமான விகிதம், சொத்து தரம் உள்ளிட்ட வங்கிகளின் நலன்சார் முக்கிய அம்சங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுக் கூட்டத்தின்போது, பொதுத்துறை வங்கிகளில், ‘பிரதமர் ஆவாஸ் யோஜனா, பிரதமர் சூர்யா கர், பிரதமர் விஸ்வகர்மா யோஜனா’ உள்ளிட்ட மத்திய அரசின் பல முன்னோடித் திட்டங்கள் அமல்படுத்தப்படுவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் நிர்மலா சீதாராமன் கேட்டறிந்தார்.மேலும், வங்கிகளில் வைப்புத் தொகையை அதிகரிக்க அவர் வலியுறுத்தியுள்ளார்.

வங்கிகளின் மூல வணிகச் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்குமாறும், புதிய புத்தாக்கத் திட்டங்களை அறிமுகப்படுத்தி வைப்புத் தொகை வளர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும் வங்கிகளின் தலைமை அதிகாரிகளிடம் நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், வங்கிகளுக்கு இணையவழி குற்றங்களால் ஏற்படும் பாதிப்பு, சைபர் பாதுகாப்பு, வங்கி மோசடி ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நடப்பு நிதியாண்டில், பொதுத்துறை வங்கிகளின் நிகர லாபம், ரூ. 1.4 ட்ரில்லியன்(ரூ. 1,41,203 கோடி) இலக்கத்தைக் கடந்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட, 35 சதவிகிதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் பாரத ஸ்டேட் வங்கியின்(எஸ்பிஐ) பங்களிப்பு 40 சதவிகிதத்துக்கும் மேல் என்பது கவனிகத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com