ராஜீவ் காந்தி பிறந்த நாளில் ராகுலின் நெகிழ்ச்சி பதிவு!
இந்தியாவுக்கான உங்கள் கனவை நிறைவேற்றுவேன் என்று ராஜீவ் காந்தி பிறந்த நாளில் அவரது மகனும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80-ஆவது பிறந்த நாள் இன்று(ஆக. 20) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, புதுதில்லியின் வீர் பூமி பகுதியில் அமைந்துள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் ராகுல் காந்தி இன்று(ஆக. 20) காலை மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது, “அப்பா, நீங்கள் கற்பித்தவையே எனக்கு உத்வேகமளிக்கின்றன, இந்தியாவுக்கான உங்களது கனவு, என்னுடைய கனவுகளும்கூட - அவற்றை நான் நிறைவேற்றுவேன், உங்களைப் பற்றிய நினைவுகள் மனதைவிட்டு நீங்காது” எனப் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.