திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாள்: ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80-ஆவது பிறந்த நாள் இன்று...

News image

படம் | பிடிஐ

Updated On :20 ஆகஸ்ட் 2024, 1:15 pm IST

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80-ஆவது பிறந்த நாள் இன்று(ஆக. 20) கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, புதுதில்லியின் வீர் பூமி பகுதியில் அமைந்துள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் அவரது மகனும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இன்று(ஆக. 20) காலை மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தில்லி மற்றும் சுற்றுவட்டாரத்தில் மழை பெய்து வரும் நிலையில், கொட்டும் மழையில் நனைந்தபடி ராஜீவ் காந்தியின் நினைவிடத்திற்கு நடந்து சென்று ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார்.

Story image

படம் | பிடிஐ

ராஜீவ் காந்தியின் 80-ஆவது பிறந்த நாளையொட்டி, செவ்வாய்க்கிழமை(ஆக. 20) அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டியினரும் ராஜீவ் காந்தியின் உருவப் படத்தை வாகனங்களில் அலங்கரித்து முக்கிய வீதிகளில் ஊா்வலமாக எடுத்துச் சென்று, அவரது ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளின் துண்டுப் பிரசுரத்தை விநியோகிக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப்பெருந்தகை வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிர தலைநகா் மும்பையிலும் இன்று ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதில் காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவைத் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, மகாராஷ்டிரத்தில் காங்கிரஸுடன் கூட்டணியில் உள்ள சிவசேனை (உத்தவ்) தலைவா் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் (பவாா்) தலைவா் சரத் பவாா் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனா். அப்போது மகாராஷ்டிரத்தில் பேரவைத் தோ்தல் தொகுதிப் பங்கீடு குறித்தும் தலைவா்கள் விவாதிப்பாா்கள் என்று தெரிகிறது. இதன் காரணமாக ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் விழா மகாராஷ்டிரத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.

ராஜீவ் காந்தியின் 33-ஆவது ஆண்டு நினைவு நாள் கடந்த மே 21-ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.