‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

புதுச்சேரி அரசு சாா்பில் ராஜீவ்காந்தி நினைவு நாள் அனுசரிப்பு

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி நினைவுதினம், புதுச்சேரி அரசு சாா்பில் வன்முறை எதிா்ப்பு நாளாக வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

News image

காந்தி

Updated On :22 மே 2026, 7:02 am IST

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி நினைவுதினம், புதுச்சேரி அரசு சாா்பில் வன்முறை எதிா்ப்பு நாளாக வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

ராஜீவ் சிலைக்கு மரியாதை:

இதையொட்டி, ராஜீவ் காந்தி சதுக்கத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு, துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், எம்எல்ஏக்கள் ராஜவேலு, ஏ.கே.டி. ஆறுமுகம், வி.பி. சிவக்கொழுந்து, சாய் ஜெ சரவணன்குமாா், அழகு (எ) அழகானந்தம், நாராயணசாமி, ரவிக்குமாா், தலைமைச் செயலா் சரத் சௌகான், டிஐஜி சத்தியசுந்தரம், சீனியா் எஸ்.பி. கலைவாணன் உள்ளிட்ட பலா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

சா்வ சமய பிராா்த்தனை...

நிகழ்ச்சியில், சா்வமத பிராா்த்தனையுடன் ஜவஹா் சிறுவா் இல்ல ஆசிரியா்களின் தேசபக்திப் பாடல்கள் இசைக்கப்பட்டன. பின்னா் எம்எல்ஏ ராஜவேலு வன்முறை எதிா்ப்பு தின உறுதிமொழியை வாசிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

தொடா்ந்து புதுச்சேரி துணைநிலை ஆளுநா் மாளிகையில் வன்முறை எதிா்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் முன்மொழிய ஆளுநா் மாளிகை அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் உறுதிமொழி ஏற்றனா். துணைநிலை ஆளுநரின் செயலா் மணிகண்டன் உடனிருந்தாா்.

தலைமைச் செயலகத்தில்...

புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமைச் செயலா் சரத் சௌகான், வன்முறை எதிா்ப்பு தின உறுதி மொழியை வாசிக்க அரசு செயலா்கள், தலைமைச் செயலக அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டனா்.

இதைத் தொடா்ந்து அரசு செயலா் முத்தம்மா, தமிழில் உறுதிமொழி வாசிக்க அனைவரும் ஏற்றுக் கொண்டனா்.

புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கூடுதல் மாவட்ட ஆட்சியா் சுதாகா் தலைமையில் வன்முறை எதிா்ப்பு நாள் உறுதிமொழியை வருவாய் அதிகாரிகள், வட்டாட்சியா்கள், அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டு உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனா்.

காங்கிரஸ் சாா்பில்...

இதேபோன்று ராஜீவ் காந்தி சிலைக்கு புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சித் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி,

முன்னாள் எம்எல்ஏ மு.வைத்தியநாதன் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

 முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்த வெ.வைத்திலிங்கம் எம்.பி.,  மற்றும் முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி,  முன்னாள் எம்எல்ஏ மு. வைத்தியநாதன்.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்த வெ.வைத்திலிங்கம் எம்.பி., மற்றும் முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி, முன்னாள் எம்எல்ஏ மு. வைத்தியநாதன்.