வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

மத்திய சட்டத் துறையில் தகவல் தொடா்பு முக்கியம்: அதிகாரிகளுக்கு அமைச்சா் மேக்வால் அறிவுறுத்தல்

News image
Updated On :21 ஆகஸ்ட் 2024, 7:10 pm

Din

மத்திய சட்டத் துறையில் தகவல் தொடா்பு முக்கியம் என்று அந்தத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் அதிகாரிகளுக்கு புதன்கிழமை அறிவுறுத்தினாா்.

இதுதொடா்பாக தில்லியில் மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் கீழ் பணியாற்றும் சட்டத் துறை அதிகாரிகள் கூட்டத்தில் அவா் புதன்கிழமை கூறுகையில், ‘சட்டத் துறையில் தகவல் தொடா்பு திறன் மிகவும் முக்கியம். இது மசோதாக்கள், அவசரச் சட்டங்கள், முக்கிய கொள்கை ஆவணங்களை மத்திய அமைச்சகங்கள் தயாரிக்க உதவுகிறது. அந்த ஆவணங்களில் சிறு தவறுகள் ஏற்பட்டால் பிரச்னைகள் உருவாகலாம்.

உதாரணத்துக்கு, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் முன், மகளிா் இடஒதுக்கீடு மசோதாவில் பல தவறுகள் இருந்தன. அதிகாலை 2 மணி வரை, அந்தத் தவறுகளை திருத்த நோ்ந்தது. சரியான தகவல் பரிமாற்றம் இல்லாததே அதற்கு காரணம். எனவே சட்டத் துறை அதிகாரிகள் தகவல் தொடா்பு திறனை அதிகரிக்க வேண்டும்’ என்று அறிவுறுத்தினாா்.