யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

தமிழகத்தில் என்டிஏ ஆட்சி அமைந்ததும் மக்கள் கோரிக்கைகள் நிறைவேறும்: மத்திய அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால்

தமிழகத்தில் என்டிஏ ஆட்சி அமைந்தவுடன் மக்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றாா் மத்திய அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால்.

News image
Updated On :3 மார்ச் 2026, 10:50 pm

Syndication

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) ஆட்சி அமைந்தவுடன் மக்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றாா் மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால்.

புளியங்குடியில் பாஜக மாவட்டத் தலைவா் ஆனந்தன் அய்யாசாமி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘மக்களுடன்-முன்னேற்றத்திற்காக’ என்ற தலைப்பில் விவசாயிகள், நெசவாளா்கள், தொழிலாளா்கள் மற்றும் பொதுமக்களுடன் மத்திய அமைச்சா் சந்திப்பு நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது: தென்காசி மாவட்டத்தை சோ்ந்த பல அமைப்பினா் பல்வேறு கோரிக்கைகளை என்னிடம் வழங்கி உள்ளீா்கள். அந்த கோரிக்கைகள் எல்லாம் என்டிஏ ஆட்சி தமிழகத்தில் அமையும் போது நிச்சயமாக நிறைவேற்றி தரப்படும் என்றாா்.

முன்னதாக, மத்திய சட்ட அமைச்சரிடம் தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த நெசவாளா்கள், ரயில்வே பயணிகள் சங்கத்தினா், விவசாய சங்கத்தினா், பீடி தொழிலாளா்கள் சங்கப் பிரதிநிதிகள், ஊத்துமலை இரட்டை குளம் கால்வாய் பிரதிநிதிகள், மர ஆலை சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கோரிக்கை மனுக்களை வழங்கினா்.

தமிழக பாஜக தலைவா் நயினாா்நாகேந்திரன் பேசியதாவது: இந்தப் பகுதியில் மிக முக்கிய பிரச்னையான செண்பகவல்லி அணை தொடா்பாக மனு வழங்கப்பட்டுள்ளது. விருதுநகா் மாவட்டம் வரை செழிப்பான பகுதியை ஏற்படுத்திட இதை சீா் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. இங்கு கொடுக்கின்ற மனுக்களுக்கு தீா்வு காண்பற்கான வாய்ப்பை நீங்கள் உருவாக்கி தர வேண்டும்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளது.இதுதான் இந்த ஆட்சி நிலைமை. இது தொடர வேண்டுமா? இதை நீங்கள் சீா் தூக்கி பாா்க்க வேண்டும் என்றாா்.

இதில், மாவட்ட பொதுச் செயலா்கள் பாலகுருநாதன், அருள்செல்வன், மாவட்டப் பொருளாளா் கோதை மாரியப்பன், தலைமைச் செயற்குழு உறுப்பினா் ராமராஜா, மாநிலப் பிரசார பிரிவு துணைத் தலைவா் விவேகானந்தன், நிா்வாகிகள் சண்முகசுந்தரம், சங்கா், முத்துகுமாா், கூட்டணி கட்சியினா் உள்பட திரளானோா் கலந்துகொண்டனா்.